பொது அறிவிப்பு

பிராணா வயலெட் சிகிச்சை என்பது தொடாமல், மருந்தில்லாமல் செய்யப்படும் பிராணா சிகிச்சை ஆகும்.

பிராணா வயலெட் சிகிச்சை இன, மத வேறுபாடின்றி அனைவருக்கும் உரியது.

ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எளிதாக கற்க கூடியது.
பிராணா வயலெட் சிகிச்சை எவ்வித மருத்துவத்திற்கும் மாற்றாகாது.

பிராணா வயலெட் சிகிச்சை அனைத்துவித மருத்துவத்துடனும் இணைந்து செய்யக் கூடியது.

பிராணா வயலெட் சிகிச்சையாளர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கு தடைசெய்யக் கூடாது.

பிராணா வயலெட் சிகிச்சையாளர் மருத்துவ பரிசோதனையோ அல்லது மருத்துவ சிகிச்சையோ செய்யக்கூடாது.

பிராணா வயலெட் சிகிச்சையாளர் மருத்துவர் அல்ல. நோயாளியை மருத்துவரை கலந்தாலோசிக்கச் சொல்ல வேண்டும்.

பிராணா வயலெட் சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

நோக்கம் மற்றும் செயல் திட்டம்

எங்கள் நோக்கம்

பிராணா சிகிச்சை கோலின் மூலம் உருவாகும் நோயற்ற ஆரோக்கியமான குடும்பங்களைக் காண்பது. நாம் அனைவரும் கடவுள் தன்மை உடையவர்கள், ஆகையால் நம்மை நாமே சுலபமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்று நம்புகிறோம்.

எங்கள் செயல் திட்டம்

ஆரோக்கியம் ஒருவரது பிறப்புரிமை.

பிராணா வயலெட் சிகிச்சையுடன் பிராணா சிகிச்சைக் கோல் வயது, மொழி, இன,மத, சாதி, அந்தஸ்து வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பிராணா சிகிச்சைக் கோல் அனைவருக்கும் உரியது.    
 
ஒவ்வொரு வீட்டிலும் பிராணா சிகிச்சைக் கோல் இருப்பது அவசியம்.

நிறுவனர் திரு. சிவா.ப அவர்கள்

பிராணா வயலட் சிகிச்சை முறையை தோற்றுவித்தவர் திரு. சிவா.P அவர்கள். இவர் 1961 ஆம் ஆண்டு மே மாதம் மலேசியா நாட்டின் செலாங்கர் மாகணத்தில் உள்ள படு அரங் என்ற ஊரில் எளிய நடுத்தர வர்க்க குடும்பத்தில் ஆறு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார்.
1986 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள மலேசிய பல்கலைக்கழகத்தில் “இயந்திர பொறியியலில்” இளங்கலை பட்டம் பெற்றார். மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூரில் சொந்த பொறியியல் ஸ்தாபனத்தை நடத்தி வருகிறார்.

ஏழை மக்களின் மருத்துவச் சுமையை குறைத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய சிகிச்சை முறையை கண்டறிவதும், எய்ட்ஸ் நோயை குணப்படுத்த ஒரு வழியை கண்டறிவதும் அவரது ஆன்மிகத் தேடலாக இருந்தது.
இந்தோனேசியாவில் உள்ள போரோபுதூர், பிரம்பனன் மற்றும் யோக்யகர்த்தாவின் கண்டிகளுக்கும் பௌர்ணமி தோறும் தொடர்ந்து சென்று அவரது ஆன்மிக தேடலை பிரார்த்தனையாக வைத்தார். 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 35வது பௌர்ணமி அன்று பிராணா சிகிச்சை முறையானது அங்குள்ள தலைமை ஆசான் மற்றும் அண்டவெளி உயிர்கள் (தேவதைகள்) மூலமாக தெய்வீக பரிசாக  திரு. சிவா.P அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

போரோபுதூர் ஒரே பெரிய ஸ்தூபியாக கட்டப்பட்டுள்ளது. வானில் இருந்து பார்த்தல் ‘ஸ்ரீ சக்கரம்” போன்ற ஒரு அண்டவெளி வடிவமாக காட்சி அளிக்கிறது. புராதன சின்னமான போரோபுதூரின் வான்வெளித் தோற்ற வடிவமே பிராணா சிகிச்சைக் கோலின் வடிவம்.
2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் மொத்தம் 69 பௌர்ணமிக்கு  அங்கு சென்றுள்ளார். திரு. சிவா.P அவர்கள் மலேசியா, சிங்கபூர், இந்தியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, உருகுவே, பர்மா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்ரீலங்கா, நேபாளம், திபெத், தாய்லாந்து, பெரு மற்றும் ஐக்கிய நாடுகளிலும் பிராணா சிகிச்சை வகுப்புகளை நடத்தியுள்ளார்.
பல நாட்டை சேர்ந்த பல சமூக பின்னணி கொண்ட பல தரப்பட்ட மக்களுக்கு பிராணா சிகிச்சை அளித்து குணமடைய செய்துள்ளார்.

முன்னுரை

பிராணா வயலட் சிகிச்சை எனபது தொடாமல், மருந்தில்லாமல் செய்யப்படும் பிராணா சிகிச்சை. பிராணா வயலட் சிகிச்சை அண்டவெளியின் பொதுவான கர்ம விதியை பின்பற்றுகிறது. மன்னிப்பு அறிக்கைகளே எமது பிராணா சிகிச்சையின் அடிப்படை ஆகும்.
        ஒருவருக்கு வரும் பிரச்சினைக்கு அவரது சொந்த கர்மா/ செயல் மட்டுமே காரணம். அது அவர் அறிந்தோ, அறியாமலோ, இப்பிறவியிலோ, முற்பிறவிகளிலோ செய்த செயலாக இருக்கலாம். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் எங்களால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. இதற்காகவே நாங்கள் ‘மன்னிப்பு அறிக்கை’ தொகுப்பினை வைத்திருக்கிறோம்.
         ‘ஆன்மிக அறிக்கை’களும் பிராணா சிகிச்சையின் ஒரு பகுதி ஆகும். அது ஒருவரை அவரது உயர் ஆன்மாவுடன் இணைத்து, அவரது ஆன்மிக சக்தியை பெருக்கி, இறுதியாக அவரது ஆன்மாவை இறைவனுடன் இணைக்கிறது.
         சிகிச்சை ‘பிராணா சிகிச்சை கோல்’ மூலமாக செய்யப்படுகிறது. கோலானது பிராணா எனப்படும் ‘உயிர் சக்தி’யை தொடர்ந்து வெளியிடும் ஒரு அண்டவெளியின் தெய்வீக வடிவமாகும்.
          மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மிக உறுதிமொழிகளை முறையாக தொடர்ந்து படித்து, ‘பிராணா சிகிச்சை கோலை’ முறையாக உபயோகித்து வந்தால், ஆரோக்கியமான உடல், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான ஆரா மற்றும் அதிக ஆன்மிக சக்தி ஆகியவை கண்டிப்பாக கிடைக்கும்.