செய்வினை (Black Magic)

செய்வினை மொத்தம் நான்கு கட்டமாக உள்ளது. முதல் இரண்டை செய்வினை என்று சொல்லாமல் இருண்ட சக்தி மற்றும் கரிய சக்தி என்றும் கூறலாம்.

முதல் கட்ட இருண்ட சக்தி (ஆன்மா சம்பந்தப்பட்டிருக்கலாம்)
இரண்டாம் கட்ட கருப்பு சக்தி (ஆன்மா சம்பந்தப்பட்டு இருக்கும்)
மூன்றாம் கட்ட செய்வினை (கண்டிப்பாக ஆன்மா சம்பந்தப்பட்டு இருக்கும்)
நான்காம் கட்ட செய்வினை (கண்டிப்பாக ஆன்மா சம்பந்தப்பட்டு இருக்கும்)

முதல் கட்ட இருண்ட சக்தி :ஒருவரோ அல்லது பலரோ, தொடர்ந்து அனுப்பும் எதிர்மறை எண்ணங்கள் இருண்ட சக்தியாக மாறலாம். இதில் இருவரோ அல்லது அதற்க்கு மேற்பட்டவரோ சம்பந்தப்பட்டு இருக்கலாம். இருண்ட சக்திக்கான சில உதாரணங்கள்,

உதாரணம் 1:  ஒருவரோ அல்லது பலரோ ஒரு அழகிய பெண்ணை விரும்பலாம். ஆனால் அவளோ யாரையும் விரும்பாமல் இருக்கலாம். அந்த ஆண்கள் ஏமாற்றம் மற்றும் கோபம் அடையலாம். அதனால் அப்பெண்ணிற்கு அவளை விரும்பி அடையாமல் போன ஆண்களிடமிருந்து எதிர்மறை எண்ணங்கள் வரலாம். அது அப்பெண்ணிற்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும்.

உதாரணம் 2: அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வேலைக்கு சீக்கிரம் சென்று தாமதமாக திரும்பி வந்து கடினமாக உழைத்து மேலதிகாரிகளிடம் பாராட்டு மற்றும் பதவி உயர்வை பெறுகிறார். அவருக்கு மற்ற அலுவலர்களிடமிருந்து நிறைய எதிர்மறை சக்திகள் வரலாம்.

உதாரணம் 3: உங்களுக்கு புத்திசாலி குழந்தை இருந்தால், மற்ற குடும்பத்தில் இருந்தும், பள்ளியில் மற்ற குழந்தைகளிடம் இருந்தும் நிறைய பொறமை சக்தி வரலாம். அந்த குழந்தை தேவையில்லாமல் அடிக்கடி நோயுர நேரிடும்.
இரண்டாம் கட்ட கருப்பு சக்தி: ஒருவர் எதாவது ஒரு வழிபாட்டு ஸ்தலத்திற்கு சென்று தனக்கு பிடிக்காத நபரையோ அல்லது குடும்பத்தையோ நினைத்து எதிர்மறையாக வேண்டும் போது, இந்த வகையான கருப்பு சக்தி உருவாகும். யாரைக் குறித்து எதிமறையாக வேண்டுதல் செய்யப்பட்டதோ, அவருக்கு அந்த வழிபாட்டு தலத்தில் இருந்து எராளமான எதிர்மறை சக்தி செல்லலாம். கருப்பு சக்திக்கு சில உதாரணங்கள்,

உதாரணம் 1: விவாகரத்து பெற்ற ஒருவர் எதிர்மறை உணர்ச்சியுடன் நியாயம் வேண்டி சிறுதெய்வ வழிபாடு செய்வதால், முன்னாள் கணவர் அல்லது முன்னாள் மனைவிக்கு கருப்பு சக்தி செல்லும்.

உதாரணம் 2: ஒருவர் ஏற்கனவே பதவி உயர்வுக்கு தகுதியான பலர் இருந்தும் தனக்கே அந்த பதவி உயர்வு வேண்டும் என வழிபட்டு, அப்படி பதவி உயர்வு கிடைத்தால்  வேண்டுதல்கள் செய்வதாக உறுதி அளித்தால், அந்த வழிபடும்  ஸ்தலத்தில் இருந்தோ அல்லது அங்குள்ள ஆன்மாக்களிடம் இருந்தோ கருப்பு சக்தி உருவாகி பதவி உயர்வுக்கு காத்திருக்கும் பிறரை பாதிக்கும்.

உதாரணம் 3: மாமியார் மருமகளுக்கு எதிராகவோ, மருமகள் மாமியாருக்கு எதிராகவோ வேண்டும் போதும் கருப்பு சக்தி உருவாகலாம்.

மூன்றாம் கட்ட செய்வினை: மாந்திரீகம் செய்யும் மந்திரவாதிகள், சூனியம் செய்பவர்கள் போன்றோர் சில சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் மூலமாக பல நாடுகளில், பல பெயர்களில் செய்வினை செய்கிறார்கள். அத்தகையவர்களிடம் பணம் செலுத்தி உதவி பெற்று மற்றவர்களை நோக்கி எதிர்மறை சக்திகள் மற்றும் ஆன்மாக்களை அனுப்புவது மூன்றாம் கட்ட செய்வினை ஆகும். வழக்கமாக ஒருவரின் புகைப்படம், துணி, தலைமுடி, நகம் போன்றவற்றைக் கொண்டு இத்தகைய செய்வினை செய்வார்கள். ஆவிகளை ஏவி செய்யப்படும் இதற்க்கு பெரும் தொகை செலுத்தப்படுவது உண்டு. சில சமயம் இதற்காக மிருகங்கள், பறவைகளை பலி கொடுக்கவும் செய்வார்கள். பழங்காலத்தில் மனித பலி கூட கொடுக்கும் பழக்கம் இருந்தது. இவ்வகை செய்வினைக்கு சில உதாரணங்கள்,

உதாரணம் 1: வேளையில் பதவி உயர்வு பெற
உதாரணம் 2: குறிப்பிட்ட நபரை திருமணம் செய்ய
உதாரணம் 3: குறிப்பிட்ட நபரையோ அல்லது குழுவையோ வசியம் செய்ய
உதாரணம் 4: முன்னாள் காதலன்/காதலி/மனைவி/ கணவன் போன்றோரை பழிவாங்க
உதாரணம் 5: மற்றவர்களின் வியபாரத்தை அழிக்க அல்லது மற்றவர்களின் வெற்றியைத் தடுக்க
உதாரணம் 6 ஒருவரை உடல் அளவில் காயப்படுத்த மற்றும் கொலை செய்ய

நான்காம் கட்ட செய்வினை: இந்த ஆவிகள் உலகத்தில் இருந்து வரும் எதிர்மறை சக்தியாகும்.  முன்னோர்களில் சிலர் தன் வாழ்நாளில் மாயதந்திரங்கள் செய்பவராக இருந்தால், அவர்கள் மூலமாக கூட இப்போது இருக்கும் சந்ததியினருக்கு எதிர்மறை சக்திகள் வரும்.

இவ்வகை எதிர்மறை உணர்ச்சி ஒருவரது முன்ஜென்மத்தில் பழகிய நபரின் ஆன்மாவினால் கூட வரலாம். அந்த ஆன்மாக்கள் இந்த பிறப்பிலும், நம்மைச் சுற்றியோ நமது ஆராவிலோ கூட இருக்கலாம்.

உதாரணம் 1: கனவில்/தூக்கத்தில் கற்பழிக்கப்படும் உணர்வு அல்லது நிஜமாகவே உடல் ரீதியாக கற்பழிக்கப்பட்ட உணர்வு.
உதாரணம் 2: உங்களைச் சுற்றியுள்ள ஆன்மாக்கள் உங்களது பிராணாவை நீங்கள் அறியாமல் உறிஞ்சிக்கொண்டிருக்கும்.
உதாரணம் 3: முன்னோர்களின் ஆன்மா ஒருவரையோ அல்லது ஒரு குடும்பம் முழுவதையோ காப்பாற்றும் பொருட்டு மற்றவர்களை நோக்கி எதிர்மறை சக்தியை அனுப்பலாம்.