பிராணா(Prana)

பிராணா என்ற சமஸ்கிருத வார்த்தை நம்மை சூழ்ந்துள்ள, பூமியைச் சூழ்ந்துள்ள, சூரிய மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மற்றும் பிரபஞ்சமெங்கும்  நிறைந்துள்ள உயிர்ச் சக்தியை குறிக்கும். இது சீனத்தில் ‘ச்சீ’ என்றும், ஜப்பானில் ‘கீ’ என்றும், பாலினேசியனில் ‘மனா’ என்றும், மேற்கத்திய நாடுகளில் ‘லைப் ஃபோர்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.

நாம் என்றால் உடல், மனம் மற்றும் ஆன்மா. உடல் எனபது கண்ணுக்குத் தெரியும் பாகங்கள், உள் உறுப்புகள், திரவங்கள் மற்றும் ஜீரண மண்டலம், எலும்பு மண்டலம் போன்ற அணைத்து மண்டலங்கள். இந்த பரு உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு பிராணா தேவை. பிராணா எனபது ஆன்மா, மனம், சக்கரங்கள், நாடிகள் மற்றும் ஆராவின்(சூட்சும உடல்/ ஒளி உடல்) மொத்த கலவையாகும். பிராணா தாரளமாக இருக்கும் வரை உடல் ஆரோக்கியமாக இருக்கும். பிராணா குறையும் பொது எதிர்மறை சக்திகள் உடலை ஆக்கிரமித்து பலவீனத்தையும், நோயையும் உண்டாக்கும்.

பிராணா உற்பத்தி ஆகும் இடம்

சூரியன், பூமி மற்றும் அண்டவெளியில் இருந்து பிராணா உருவாகிறது. அவை முறையே சூரிய பிராணா, பூமி பிராணா மற்றும் அண்டவெளி பிராணா என்றழைக்கப்படுகிறது.

நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் நீர், மரங்கள், தெய்வீக மனிதர்கள், புனித ஸ்தலங்கள், ஸ்படிகங்கள், சில கணித வடிவங்கள், புனித புத்தகங்கள், சில சின்னங்கள் போன்றவற்றில் இருந்தும் பிராணா உருவாகிறது.

தொன்று தொட்டே, பல நாடுகளில் உடலில் பிராண சக்தியை உருவாக்கி, அவற்றின் ஓட்டத்தை அதிகரித்து, ஆரோக்கியமாக இருக்க பலவிதமான பிராணா உடற்பயிற்சிகள் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக இந்தியாவின் யோகா, சீனாவின் சீ-குங் மற்றும் தாய்ச்சி, ஜப்பானின் அகிடோ ஆகியன பிராணா உடற்பயிற்சி ஆகும்.

இந்திய யோக பிரணயாம மூச்சி பயிற்சியின்  மூலம் உடலில் பிராணாவின் ஓட்டத்தை அதிகரித்து நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்ப்படுத்திக் கொள்ளலாம்.

நாம் சுவாசிக்கும் போது பிராண வாயு மட்டுமல்லாது சுற்றுபுறத்தில் உள்ள வெள்ளி நிறத்திலான  சக்தியின் சிறிய துகள்களையும் சேர்த்து உள்ளே இழுக்கிறோம். அவையே காற்று பிராணா.

மேலே கூறிய வழிகளின் மூலமாக, நம்மில் பலர் நம்மை அறியாமலேயே பிராணாவை பெறுகிறோம். அது நமது அன்றாட பழக்க வழக்கத்திலேயே  நடைபெறுகிறது. விழிப்புணர்ச்சி இன்றி செய்வதால் அந்த பிராணாவின்  அளவையோ, ஆராவில் அதன் விளைவையோ அளவிட முடியாது.

பிராணாவை அதிகரிக்கப்பது எப்படி?

நாங்கள் எப்படி பிராணாவின் அளவை உடலில் அதிகரித்து அதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என சொல்லித் தருகிறோம்.

சூரியன், பூமி, மற்ற நட்சத்திரங்கள், மற்ற கோள்கள், மரங்கள், கடல்கள், சுற்றியுள்ள மலைகள் – இவை அனைத்தும் ஒரே சக்தியால் படைக்கப்பட்டவை. நாம் அனைவரும் பிரபஞ்ச குடும்பத்தில் ஒரு அங்கத்தினர். ஆகையால் நம்மிடையே கண்ணுக்குத் தெரியாத தொடர்பு இருக்கிறது. நமது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் மூலமாக நாம் அண்டவெளியில் உள்ள நம்மை போன்றோருடன் உடனடியாக இணைய முடிகிறது.

சூரியன், பூமி மற்றும் மரங்களிடம் சிறிது பிராணா சக்தியை தருமாறு கேட்டு பெறலாம். அதற்கு தேவையானவை ‘நன்றி அறிவித்தல்’ மற்றும் ‘பாராட்டுக்கள்’ மட்டுமே. உங்கள் விருப்பப்படி சொற்களைச் சேர்த்து கீழ்கண்ட உறுதிமொழியைப் படிக்கலாம்.

சூரிய பிராணாவை பெறுதல்

சூரியனை பார்த்தவாறு நின்று கொண்டு உள்ளங்கையை விரித்து வைத்தபடி உங்களுக்குத் தெரிந்த மொழியில் இப்படிக் கேட்கவும்.

ஓ தெய்வீகச் சூரியனே! எங்களுக்காக ஒளி வீசுவதற்கு நன்றி.ஒளியும் அனைத்திற்கும் உயிரும் கொடுப்பதற்கு நன்றி. உமது சக்தியில் சிறிது எனக்கு கொடுத்து என்னை புத்துணர்ச்சி அடைய செய்யவும். நன்றி. நன்றி. நன்றி.

உங்கள் ஆரா பல மடங்கு அதிகரித்து இருப்பதை சிகிச்சை கோலைக் கொண்டு அளந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பூமி பிராணாவை பெறுதல்

கீழே பூமி மாதாவை பார்த்தவாறு நின்று கொண்டு உள்ளங்கையை விரித்தபடி இப்படிச் சொல்லவும்.
ஓ தெய்வீக பூமித் தாயே! எனது இருப்பிடமாக இருப்பதற்கு நன்றி. எனக்கு உணவு, இருப்பிடம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை கொடுப்பதற்கு நன்றி. நான் குணமடையவும், புத்துணர்ச்சி பெறவும் உங்கள் சக்தியில் சிறிதை எனக்கு தயவு செய்து கொடுக்கவும். நன்றி. நன்றி. நன்றி.

உங்கள் ஆரா பல மடங்கு அதிகரித்து இருப்பதை சிகிச்சை கோலைக் கொண்டு அளந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

மரங்களிடம் பிராணாவை பெறுதல்

மரங்களை பார்த்தவாறு நின்று கொண்டு உள்ளங்கையை விரித்தபடி வைத்தவாறே கீழ்காணும் உறுதிமொழியைச் சொல்லவும்.
ஓ தெய்வீக மரமே! நாம் இருவருமே தெய்வீகப் படைப்பு. என்னை குணப்படுத்திக் கொள்ள உதவி கேட்டு உன்னிடம் வந்துள்ளேன். உனது உபரி சக்தியை எனக்களித்து என்னை குணப்படுத்தி, என்னை புத்துணர்ச்சி பெற செய்து, எனது வலிகளைப் போக்குவாயாக.
(5 நிமிடம் காத்திருக்கவும்) நன்றி. நன்றி. நன்றி.
மரங்களிடம் இருந்து உபரி சக்தியை மட்டுமே கேட்டுப் பெறவும். ஏனென்றால், மரம் தனது அனைத்து சக்தியையும் கொடுத்து விட்டு தன்னைத் தானே அழித்து கொண்டு விடும். உங்கள் வலி போயிருப்பதை அறியலாம்.

அண்டவெளி பிராணாவை பெறுதல்

அண்டவெளியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் எராளமான பிராணா நமது சஹஸ்ரார சக்கரத்தின் வழியாக உடலில் பாயும். சில சொற்கள் பிராணாவின் ஓட்டத்தை உடலில் அதிகரிக்கச் செய்யும். “நான் நானே தான்” என்று சொல்லும் போது ஆரா உடனடியாக மிக மிகப் பெரியதாகிறது என்று கண்டறிந்துள்ளோம்.

“நான் நானே தான்” என்றால் “நான் ஒரு ஆன்மா” எனபது பொருள். இவ்வாக்கியத்தை சொல்லும்போது உங்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வதால், உங்கள் ஆன்மா உடனடியாக கடவுளுடன் தொடர்பு கொள்கிறது. இறை சக்தி உங்களுள் பாய ஆரம்பிக்கிறது.

உணவில் இருந்து பிராணாவை பெறுதல்

நாம் உண்ணும் உணவில் நிறைய பிராணா சக்தி இருக்கிறது. தனக்கென்று பிராணாவை   பழம் மற்றும் காய்கறிகள் சூரியனிடம் இருந்து பெற்று சேமித்து வைக்கின்றன. எந்த பழத்தில் எந்த நிறப் பிராணா இருக்கிறது என்று கோலினால் கண்டறியலாம்.  ஒரு பழத்தில் நிறைய நீல நிறப் பிராணா இருந்தால், (தொண்டை சக்கரத்தின் நிறம் நீலம் என்பதால்) அது தொண்டைக்கு மிகவும் நல்லது, மஞ்சள் நிற பிராணா வயிற்றுக்கும் ஜீரணத்திற்கும் நல்லது.

சமைத்த உணவில் சமைக்கும் போது, சமைப்பவரிடம் இருந்த உணர்வுகளின் சக்தியும் சேர்ந்து இருக்கும். சமைப்பவர் எதிர்மறையான எண்ணங்களுடன் சமைத்தால், அந்த எதிர்மறை உணர்ச்சி அவர்கள் சமைக்கும் உணவில் கலந்து, உண்பவரையும் பாதிக்கிறது. அப்படிப்பட்ட எதிர்மறை உணர்ச்சிகளை உணவில் இருந்து நீக்க பிராணா சிகிச்சை கோல் உதவுகிறது.

நீரின் பிராணா

நமது வார்த்தைகள் மற்றும் உணர்வுகளின் சக்தியை நீர் கிரகித்துக் கொள்கிறது. சிகிச்சை கோலினால் நீரின் எதிர்மறை சக்தியை கண்டறிந்து நீக்கலாம். அன்பு மற்றும் நன்றியுடன் நல்ல வார்த்தைகள் கூறி நீரை வாழ்த்துவதன் மூலமும், சிகிச்சை கோலினாலும், நீரில் நேர்மறையான நல்ல குணப்படுத்தும் சக்தியை நீரில் நிரப்ப முடியும்.

காற்றின் பிராணா

எளிய சுவாசம், பிராண சுவாசம், யோகியின் சுவாசம் மற்றும் சமன்படுத்தும் சுவாசம் ஆகியவற்றை எங்கள் பயிற்சி வகுப்பில் சொல்லி தருகிறோம். இத்தகைய சுவாசப் பயிற்ச்சிகளை செய்தால், நிறைய பிராண சக்தி உடலில் பாய்ந்து, சக்கரங்களால் கிரஹிக்கப்பட்டு, உடல் முழுவதும் பரவுகிறது. சமன்படுத்தும் சுவாசம், இடது மற்றும் வலது பக்க மூளையின் சக்தியை  சமன் படுத்தி ஒற்றைத் தலைவலியை குணமடையச் செய்கிறது. அனைத்து சுவாசப் பயிற்சி செய்யும் போதும் நாக்கை மடித்து மேல் அண்ணத்தில் தொட்டவாறே(கேசரி முத்திரை) செய்ய வேண்டும்.