பயிற்சி வகுப்புகள் (Workshops)

பிராணா வயலட் சிகிச்சை அடிப்படை பயிற்சி
இது எமது அறிமுக/அடிப்படை வகுப்பு. ஒருவர் மற்ற பயிற்சியை கற்கும் முன் இந்த அடிப்படை வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். நாங்கள் பிராணா சிகிச்சை கோலை கொடுத்து அவற்றை கொண்டு ஆராவை உணர்வது எப்படி?, சிகிச்சை அளிப்பது எப்படி? என்று கற்றுத் தருவோம். அதன்பின்பு, நீங்கள் நன்கு பயிற்சி செய்து உங்களது உணரும் தன்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்கிறோமோ அவ்வளவு எளிதாக சூட்சும சக்திகளை உணரலாம். ஆராவை உணர்வதும் மிகவும் எளிதாகும். இவ்வகுப்பில் சக்தி உடலில் சிகிச்சை அளிப்பதன் மூலம் பரு உடலின் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம்.

பிராணா வயலட் சிகிச்சை உயர்நிலை பயிற்சி

இதில் எப்படி உடல் உறுப்புகளை சோதிப்பது என்றும், உறுப்புகளுடன் தொடர்புடைய சக்கரங்கள் பற்றியும் சிறிய மற்றும் மிகச் சிறிய சக்கரங்கள் பற்றியும் கற்றுக் கொள்ளலாம்.

உணவு

பிராணா சிகிச்சை கோலை கொண்டு எந்த உணவை உண்ணலாம், எந்த உணவை உண்ணக்கூடாது என்று கண்டறிவது எப்படி என்று இவ்வகுப்பில் கற்றுக் கொள்ளலாம். உங்கள் உடலின் தன்மை அமிலமா? காரமா? அல்லது நடுநிலையில் உள்ளதா என்பதை அறிந்து அதற்கேற்ப உணவை தேர்ந்தெடுப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்கள்/உணர்வுகள் நீக்குவதற்கு பயிற்சி

உயர்நிலை வகுப்பான இதில் உணர்வு உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்கள்/ உணர்ச்சிகள், அதற்கு காரணமான நபர், எப்படி அது நமது உடல், உணர்வு மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை அறிந்து அதை நீக்கவும் கற்று கொள்ளலாம். உணர்வு மற்றும் மன உடலில் உள்ள மற்ற பிற எதிர்மறை சக்திகளை  கண்டறிந்து நீக்கவும், அவ்வுடல்களில் உள்ள சக்கரங்களை சோதித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க கற்று கொள்ளலாம்.

செல்வ வளம் பெற பயிற்சி

நமக்கு செல்வ வளம் பெற சக்தி உள்ளதா? தொழில் மற்றும் வியாபாரத்தில் தடை உள்ளதா? வியாபாரத்தின் பெயர் பொருத்தமாக உள்ளதா? தடைகளை நீக்குவது எப்படி? தடைகள் நீங்கிய பின் எப்படி செல்வ வளத்தை அதிகரிப்பது? அதிகரித்த செல்வா வளத்தை எப்படி தக்க வைத்துக் கொள்வது? என்பதை பற்றி எல்லாம் இந்த வகுப்பில் கற்றுக் கொள்ளலாம்.

செய்வினை மற்றும் மன பாதிப்பு

மனம் சார்ந்த பாதிப்புகள், கண் திருஷ்டி, தீய சக்திகள், சாபங்கள், மந்திரங்கள், செய்வினை, அமானுஷ்ய சக்திகள், குருமார்கள் ஏற்படுத்தும் சக்தி தடைகள் போன்றவற்றை பற்றியும், அவை எப்படி உருவாகின்றன என்பது பற்றியும் இந்த வகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

நாம் வசிக்கும் இந்த சமூகத்தில் இப்படிப்பட்ட எல்லாவிதமான சக்திகளும் விதவிதமான வடிவத்தில், விதவிதமான பெயரில் உலகின் பல பகுதிகளிலும் இருப்பதால் இவற்றைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். எங்களது வகுப்பில் கண்ணுக்குத் தெரியாத இந்த தீய சக்திகளால் பல மக்கள் பாதிக்கப்பட்டு  இருப்பதை கண்டறிந்தோம். அவர்களுக்கு இப்படிப்பட்ட சக்திகள் இருப்பது கூடத் தெரியாது.

பழமையான கலாச்சாரத்தில் இதற்காக நிறைய சடங்குகள், பலிகள் மற்றும் பிரார்த்தனைகள்  ஆகியவற்றை செய்து வந்தனர். அந்நாளில் அவர்களின் வாழ்க்கை முறை அப்படி இருந்தது. காலங்கள் மாறினாலும்  அப்படிப்பட்ட பழக்கங்களில் சில இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. மக்களும் அவர்களின் மனோபாவமும் மாறியதை போல பழைய பழக்கவழக்கங்களின் தாக்கமும் மாறிவிட்டது.

செய்வினையை நீக்குவது எப்படி என்பதை கற்று தர மாட்டோம். ஆனால் அப்படிப்பட்ட மனரீதியான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறீர்களா என்பதை கண்டறியவும், அவை பற்றிய ஒரு விழிப்புணர்வையும் தருகிறோம். செய்வினையை நாங்களே நீக்கி விடுவோம். மீண்டும் அது நம்மைத் தாக்காமல் எப்படி தற்காத்துக் கொள்வது என்று இந்த வகுப்பில் கற்று தருவோம்.

சாகும் கலை

நமது ஆன்மாவின் பயணம் பற்றியும், இந்த பிறவியில் அதன் நோக்கம் பற்றியும், உடலை விட்டு ஆன்மா நீங்கும் நேரம் வரும் போது எப்படி நல்ல முறையில் செத்து பின் ஆன்மாவை அதன் சரியான இலக்கை நோக்கி செலுத்துவது எப்படி என்றும், கர்மவினையின் படி மறுபிறப்பு எடுப்பது பற்றியும், இந்த பூலோகத்தில் மாட்டிக் கொண்டு இங்கேயே சுற்றாமல் இருப்பது எப்படி என்றும் இந்த வகுப்பில் கற்றுக்கொள்ளலாம்.

பிராணா வயலட் ஆசிரியர் பயிற்சி

பிராணா வயலட் சிகிச்சை அளிப்பவர் மற்றும் பெறுபவருக்கான வரைமுறைகளை படித்து பின்பற்ற வேண்டும். அதற்கு ஒத்து கொண்டால் மட்டுமே ஆசிரியப்பயிற்சி அளிக்கப்படும். மேலும், மற்றவர்களுக்கு தன்னலமற்ற சேவையாற்றும் தீவிர ஆசை உடையவராக இருப்பதும் அவசியம்.

உடல் உறுப்புகளை அறிந்து கொள்ளுங்கள்

பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு அவற்றை எப்படி சரி செய்வது என பிராணா சிகிச்சை வகுப்பில் நாங்கள் கற்றுத் தருகிறோம். பாதிக்கப்பட்ட உறுப்புகளின் மீது நமது இரண்டு கைகளையும் வைத்து அவற்றுக்கான நமது அன்பை தெரிவிக்க வேண்டும். அவற்றை சரியாக பராமரிக்க தவறியதற்கு மனதார மன்னிப்பு கேட்க வேண்டும். உடல் உறுப்பு சரியாவதற்கு தேவையான உணவு முறை மாற்றம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை சரி செய்வதாக வாக்களிக்க வேண்டும் மேலும் அவ்வாக்கினை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

பிறந்தது முதல் நம்முடனேயே இருந்து, சோர்வில்லாமல் தன்னலமின்றி நமது நலன் மற்றும் ஆரோக்கியத்திற்காக அவ்வுறுப்பு இருப்பதையே நாம் அறிந்திராவிட்டாலும், தொடர்ந்து வேலை செய்வதற்காக அந்த உறுப்புக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த உறுப்பு சக்தி பெறுகிறது, மகிழ்ச்சி அடைகிறது மற்றும் வேகமாக குணமடைய ஆரம்பிக்கிறது.

நமது அனைத்து உள்ளுறுப்புகள், அவற்றின் அமைப்பு மற்றும் அவை செயல் படும் விதம் ஆகியவற்றை பற்றிய அடிப்படை அறிவை ஒருவர் பெற்றிருப்பது மிகவும் அவசியம். அப்போது தான் பிரச்சனைக்குரிய உறுப்பிற்கு சிகிச்சை அளிப்பது சாத்தியமாகும். நமது உடலை நேசித்து, பாராட்டி அதனுடைய செயல் திறனுக்கு நன்றி செலுத்தினால், நமது உடல் நலன் மேம்பட்டு, சிகிச்சை மிகவும் சிறப்பாக நடைபெற ஆரம்பிக்கும்.

பாதுகாப்புக் கவசம்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை ஒன்றிணைந்து நமது பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. நாங்கள் அதை எப்படி மேம்படுத்துவது என்று கற்றுத் தருகிறோம்.

எப்போதும் உங்களைச் சுற்றி மன்னிக்கும் ஆராவை கொண்டிருப்பது.
உங்களது ஆன்மிக சக்தி.
உங்களது இறைத் தொடர்பு/ டிவைன் கார்டு(கடவுளை நோக்கி நீங்கள் ஏற்படுத்தும் தொடர்பு)
உங்களுடைய அந்தகரணம் (கடவுள் உங்களுடன் ஏற்படுத்தும் தொடர்பு)

பிராணா சிகிச்சை கோலினால் இத்தகைய அனைத்து சக்தி தொடர்புகளையும் எளிதாக கண்டு பிடிக்கலாம்.

கர்மா மற்றும் சிகிச்சை

நோயுருவதும், அரிய நோயினால் துன்புறுவதும் உங்களது கெட்ட கர்மா ஆகும். உங்களை குணப்படுத்துவது எங்களது நல்ல கர்மா ஆகும். நாங்கள் உங்களை குணப்படுத்துவோம். சரியான வழியில் உங்களை குணப்படுத்துவதால், நாங்கள் உங்கள் கெட்ட கர்மாவை ஏற்று கொள்வதில்லை. மேலும் சிகிச்சையானது நீங்கள் கர்மாவின் பாடங்களை கற்ற பின்பு நீங்களே அதை சமன் செய்வதால் மட்டுமே நடைபெறுகிறது. அதை எப்படி செய்வது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம்.