ஆரா (Aura)

மனித உடல் அல்லது ஒரு பொருளைச் சுற்றி உள்ள கண்ணுக்குத் தெரியாத ஆகாய / மின்காந்த சக்தி புலனை ஆரா என்கிறோம். பிராண சக்தியால் உருவான ஆரா வண்ணமயமானது. அது வானவில்லை போல் நம்மைச் சுற்றி உள்ள சூரிய ஒளியில் இருந்து தன் நிறங்களைப் பெறுகிறது.

உடலில் இரத்தம் பாய்வதைப் போல, பிராணா எனப்படும் சூட்சும சக்தி நமது ஆராவில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்த பிராணசக்தி ஓட்டத்தில் ஏதாவது குறுக்கீடோ அல்லது தடையோ ஏற்பட்டால் உடலில் வலி, அசௌகரியம் அல்லது நோய் தோன்றும். இயற்கையாக ஒருவர் எதிர்மறை எண்ணத்துடன் இருந்தாலோ அல்லது வலுவற்ற ஆராவைக் கொண்டிருந்தாலோ அவரின் ஆரா நிறைய எதிர்மறை சக்தியை கிரஹிக்கும்.  ஆராவில் சேரும் தேங்கியுள்ள, தீய மற்றும் அழுக்கடைந்த சக்திகளை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். ஆரா சுத்தமாக இல்லாவிட்டால், ஒருவரின் மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். சுத்தமான மற்றும் ஆரோக்கியமான ஆரா இருந்தால் வலுவான, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உடல் கிடைக்கும்.

செய்வினை, குருமார்களின் சக்தி தொடர்பு (முன் ஜென்மத்தின் காரணமாக கூட இருக்கலாம்), சாபம், அமானுஷ்ய சக்திகள், கண்திருஷ்டி போன்றவை  ஆன்மாவில் காணப்படும் எதிர்மறை சக்திகளாகும். இவைத் தவிர ஆராவில் காணப்படும் வேறு சிலவற்றை கிழே காணலாம்:

ஆன்மாக்கள் (முன்ஜென்மத் தொடர்பினால் கூட இருக்கலாம்)
மாய வஸ்த்துக்கள்
கோபம், பயம், பழி உணர்ச்சி, போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டும் சக்திகள்
குடி, புகை, போதை பற்றும் சூதாட்ட பழக்கத்தை தூண்டும் வஸ்த்துக்கள்.
மந்திர தந்திரங்களால் உருவாக்கப்பட்ட வஸ்த்துக்கள்
எதிர்மறை சிந்தனைகள்
எதிர்மறை உணர்ச்சிகளான ஏமாற்றம், கவலை, மரணபயம், கோபம், பதட்டம், சோகம் போன்றவை
முன்ஜென்ம பாதிப்பினால் வரும் அதிர்ச்சி (நீர்நிலை, உயரமான இடங்கள், நெருப்பு, பாம்பு போன்றவற்றை பார்த்து ஏற்படும் அர்த்தமற்ற பயம்)

நம் பரு உடலைச் சுற்றியுள்ள சூட்சும உடல்களான சக்தி உடல், உணர்வு உடல் மற்றும் மன உடலின் சேர்க்கையே ஆரா.

சக்தி உடல்(எனர்ஜி உடல்): ஆராவின் முதல் கட்ட பகுதியான இது பரு உடலுக்கு மிக அருகில் இருப்பதால் இதில் எதிர்மறை சக்திகள் இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பரு உடலின் தன்மை(அமிலம், காரம், போன்றவை), தாது மற்றும் வைட்டமின் குறைபாடுகள் போன்ற தகவல்கள் இங்கே இருக்கும்.  அதை பிராண சிகிச்சை கோலின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

உணர்வு உடல் (ஆஸ்டரல்/எமோஷனல் உடல்): அராவின் இரண்டாவது கட்ட பகுதியான இதில் நமது அனைத்து எதிர்மறை மற்றும் நேர்மறை உணர்ச்சிகள் அனைத்தும் பிரதிபலிக்கும். அவற்றை கோலினால் உணரலாம். இந்த உணர்வு உடலில் பாதிப்பு ஏற்பட்டாலோ, எதிர்மறையாக இருந்தாலோ மனரீதியான பிரச்சினைகள் தோன்றி உடல் நலனில் பாதிக்கும்.

மன உடல் (மெண்டல் உடல்): ஆராவின் மூன்றாவது கட்ட பகுதியான இந்த மன உடல் நமது தீவிரமான, அசைக்கமுடியாத, மாற்றமுடியாத நம்பிக்கைகள், எண்ணங்கள் மற்றும் அபிப்பிராயங்களை பிரதிபலிக்கும். உதாரணமாக மதவெறி போன்றவைகளை இந்த மன உடலில் கோலின் உதவியால் உணரலாம்.

நமது ஆரா பரு உடலுக்கு உள் இருந்து ஆரம்பித்து வெளியே வரை நீண்டிருக்கிறது. பரு உடலின் உள்ளே ஊடுருவியும், பரு உடலுக்கு அப்பால் நீண்டும் இருக்கிறது. மிருகங்கள், செடிகள், பழங்கள், நீர் மற்றும் உணவு போன்ற அனைத்திற்கும் ஆரா உண்டு. நமது பூமிக்கென்று தனியாக ஆரா இருக்கிறது.

காரண உடல் (காசல் உடல்) ; நமது ஸ்தூல வெளிக்கு வெளியே உள்ள மற்றொரு சூட்சும உடல் காரண உடல் ஆகும். காரண உடலே நமது ஆன்மா உறையும் இடமாகும்.  மற்றொரு உயர் வெளியில் இருக்கும் இந்த காரண உடலை பிராண சிகிச்சை கோலால் உணர முடியாது. ஆன்மாவின் அனைத்து பிறவிகளின் கர்மாவையும் சேமித்து வைக்கும் கர்ம வங்கியாக இந்த காரண உடல் இருக்கிறது. நமது இறப்பிற்கு பிறகு ஆன்மா தனது அனைத்து சூட்சும உடல்களுடன் காரண உடலில் இணைகிறது. அவரவர் கர்மவினைக்கேற்ப ஆன்மா வேறு புதிய உடலில் மறுபிறப்பு எடுக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் தெய்வீக சக்தி தொடர்பு/ வெள்ளி நிற சக்தி தொடர்பு இருக்கிறது. இது காரண உடல் வழியே, நம்மை படைத்த பேராற்றல் கொண்ட இறை ஒளியுடன் நம்மை இணைக்கிறது. இது ஒரு ஒளிக்கற்று போல இருக்கும். இறைசக்தியுடன் நமது தொடர்பின் உறுதியை பொருத்து சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.

இறைவனிடம் இருந்து மற்றுமொரு ஒளிக்கற்று தெய்வீக சக்தி தொடர்புடன் கலந்து நமது சஹஸ்ரார சக்கரத்திற்கு வரலாம், அதன் பெயர் அந்தகரணம். இது கடவுள் நம்முடன் ஏற்படுத்தும் தொடர்பு. அந்தகரண ஒளிக்கற்றின் அளவானது இறைவன் எந்த அளவிற்கு நம்மை தொடர்பு கொள்கிறாரோ, நம்மை கருவியாக கொண்டு செயல்படுகிறாரோ, அந்த அளவிற்கு பெரியதாக இருக்கும்.

பிராண சிகிச்சை கோலின் மூலமாக தெய்வீக சக்தி தொடர்பு (டிவைன் கார்டு) மற்றும் அந்தகரண தொடர்பின் அளவை உணரலாம். இந்த இரண்டு சக்தி தொடர்பின் அளவும் நமது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பொருத்து மாறிக்கொண்டே இருக்கலாம்.