பிராண வயலெட் ஹீலிங் - அடிப்படை

அடிப்படை ஹீலிங் பயிற்சி
ப்ராணிக் ஹீலிங் வாண்ட் கொண்டு அனைவரும் சிகிச்சை அளிக்கலாம்

எங்கள் நோக்கம்:
·          ப்ராணிக் ஹீலிங் வாண்ட் மூலம் உருவாகும் நோயற்ற ஆரோக்கியமான குடும்பங்களைக் காண்பது.
·          நாம் அனைவரும் கடவுள் தன்மை உடையவர்கள், ஆகையால் நம்மை நாமே சுலபமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்று நம்புகிறோம்.
·          அனைவரும் வலியின்றி இருக்க வேண்டும்.
·          நாங்கள் விரும்புவது எங்கும் மகிழ்ச்சியான குடும்பங்கள்.

எங்கள் குறிக்கோள்   :
·          ஆரோக்கியம் ஒருவரது பிறப்புரிமை. பிராணா வயலெட் சிகிச்சையுடன் பிராணா சிகிச்சைக் கோல் இன,மத வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
·          பிராணா சிகிச்சைக் கோல் அனைவருக்கும் உரியது.     
·          ஒவ்வொரு வீட்டிலும் பிராணா சிகிச்சைக் கோல் இருப்பது அவசியம்.
·          நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளைக் குறைக்க விரும்புகிறோம்.


பொது அறிவிப்பு 

·          பிராணா வயலெட் சிகிச்சை என்பது தொடாமல், மருந்தில்லாமல் செய்யப்படும் சிகிச்சை ஆகும்.
·          பிராணா வயலெட் சிகிச்சை இன, மத வேறுபாடின்றி ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எளிதாக கற்க கூடியது.
·          பிராணா வயலெட் சிகிச்சை எவ்வித மருத்துவத்திற்கும் மாற்றாகாது.
·          பிராணா வயலெட் சிகிச்சை அனைத்துவித மருத்துவத்துடனும் இணைந்து செய்யக் கூடியது.
·          பிராணா வயலெட் சிகிச்சையாளர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கு தடைசெய்யக் கூடாது.
·          பிராணா வயலெட் சிகிச்சையாளர் மருத்துவர் அல்ல. நோயாளியை மருத்துவரை கலந்தாலோசிக்கச் சொல்ல வேண்டும். 
.      பிராணா வயலெட் சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.




பிராணா சிகிச்சைக் கோலும் பிராணாவை வெளியிடும் மிகவும் சக்திவாய்ந்த பொருளாகும். இந்த பிராணாவைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம், வீடுகளை தூய்மைப்படுத்தலாம், எதிர்மறை எண்ணங்களை நீக்கலாம்.


பிராண சிகிச்சையின் மூன்று கொள்கைகள்
  மனித உடல் தன்னைத் தானே குணப்படுத்தி கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது
  மனித உடலின் நலனுக்கு பிராணா அவசியம் தேவை
  பரு உடல் மற்றும் சக்தி உடலின் நலனை பிராணா துரிதப்படுத்துகிறது.

சிகிச்சை பிராணா சிகிச்சை கோல் மூலமாக செய்யப்படுகிறது.
  அனைவரும் குணப்படுத்தலாம்.   
  அனைவருக்குள்ளும் ஆற்றல் உண்டு.
  இது பரிசல்ல, எளிதாக கற்று கொள்ளக் கூடிய சிறிய உத்தி தான்.
  நாங்கள் அதைக் கற்று தரப் போகிறோம். 


பிராண சிகிச்சை கோல் உபயோகிக்க பின்பற்ற வேண்டிய நிபந்தனை
  சுத்தப்படுத்த தேவையில்லை
  ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை
  ப்ரோகிராம் செய்ய வேண்டாம்.
  மந்திரம் சொல்ல வேண்டாம்.
  எந்தவித தியானமும் வேண்டாம்.
  பிரபஞ்ச சக்தியுடன் இணைய வேண்டாம்.
  தீட்சை வாங்க வேண்டாம்.
கோல் பயன்படுத்த விதிகள்
  உண்மையில் விதிகள் எதுவும் இல்லை
  எங்கும் எடுத்து செல்லலாம்.
  எங்கும் வைத்துக் கொள்ளலாம்.
  யாரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.
  சைவமாக இருக்க வேண்டாம்      
  கோல் சிறு குழந்தைகளுக்கு கூட மிகவும் பாதுகாப்பானது

பிராணா சிகிச்சை கோல்
2 பக்கங்கள் உடையது


  ஒருபுறம் ஆராவை உணர.                            
  மறுபுறம் சிகிச்சை செய்ய.
இரண்டு நிலை சிகிச்சை
  ஆராவை உணர்தல்
  பிராண சிகிச்சை
நான்கு கட்ட சிகிச்சை முறை
1.   ஆராவை சுத்தப்படுத்துதல்.                                 
2.   இடை-பிங்கலை சமப்படுத்துத்தல்.                     
3.   கார்டுகளை நீக்குதல் மற்றும் சக்கரங்களை செம்மையாக்குதல்.
4.   தேவையான இடத்தில் பிராண சக்தி அளித்தல்.

ஆராவை தூய்மைப்படுத்துதல்
பிராணா சிகிச்சை கோல் ஆராவிலிருந்து அனைத்து தேவையற்ற நோய் மற்றும் தீய சக்திகளை நீக்கிவிடும்
ஆரா தூய்மையடைந்த உடன் இயற்கையான பிராண சக்தி உடலில் சீராகப் பாய்ந்து ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.  
இடை-பிங்கலை நாடிகளை சமன் செய்தல்
இந்த முறையானது முக்கிய நாடிகளான இடை, பிங்கலை மற்றும் சூட்சும நாடிகளை சுத்தம் செய்கிறது
நரம்பு மண்டலத்தை சமன் செய்கிறது
கார்டுகளை கண்டுபிடித்து நீக்குதல்
  அநாதக சக்கரத்தை உணர்ந்து கட்டுகளை சோதிக்க வேண்டும், சக்தி 6 அடிக்கு மேல் நீளமாயிருந்தால் கார்டு இருக்க வாய்ப்புண்டு.                                                      
  பொது மன்னிப்பு அறிக்கையை படித்தபின் சோதிக்கவும்.
  யாரிடமிருந்து வருகிறதென்று அறியவும்.                  
  அதற்குரிய மன்னிப்பு அறிக்கையை படிக்கவும்.           
சக்கரத்தை சீராக்குதல்
 

  சக்கரத்தின் அளவு 2 முதல் 6 இன்ச் இருக்கும், ஆன்மீக வளர்ச்சி இருந்தால் பெரிதாயிருக்கலாம்
  சில நேரம் சக்கரங்கள் சரியான அளவை விட பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம்.
  சக்கரத்தை சீராக்கும் போது, அளவை கணக்கிட்டு வட்டவடிவாக கோலை 5 முறை சுற்ற வேண்டும். சக்கரம் சீராகும் வரை கணக்கிட்டு, சீராக்க வேண்டும். 

தேவையான இடத்தில் சிகிச்சை
  எவ்விடத்தில் தேவையோ, அவ்விடத்தில் ஆராவின் சக்தியை சோதிக்கவும்.
  ஆராவின் சக்திக்கேற்ப 2 அடி அல்லது அதிகமாக கோலை அவ்விடத்தில் காண்பித்து சிகிச்சை அளிக்கலாம்.
மன நோய்களை நீக்குதல்
  மன நோயின் நிலைமையை அறியவும்.
  கோலின் உதவியால் ஆழ்மனதிலிருந்து நீக்கவும்.
சுய சிகிச்சை
  உங்களை நீங்களே தொலைவில் கற்பனை செய்து 4 நிலை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
  முழு உடல் அளவையும் கற்பனை செய்வது அவசியம்.
  உங்கள் ஆராவையும் உணரலாம்.
தொலை சிகிச்சை
  சுய சிகிச்சை செய்த மாதிரியே, இம்முறை சிகிச்சையளிக்க வேண்டிய நபரை முன்னால் கற்பனை செய்ய வேண்டியது தான்.
 

  கற்பனை செய்ய முடியாவிட்டால், மனித உருவம் ஒன்றை சுவற்றில் மாட்டி வைக்கலாம்.
  வேறு ஒருவரை நிறுத்தியும் சிகிச்சை செய்யலாம்.
வீடு மற்றும் அலுவலகத்தை சுத்தம் செய்தல்
  வசிக்கும் இடங்களில் எதிர்மறை சக்தி நிறைந்திருக்கலாம். மேலோட்டமாக சுத்தமாக   இருந்தாலும், சக்தி நிலை சுத்தமில்லாமல் இருக்கலாம்.
  அத்தகைய எதிர்மறை சக்திகள் உள்ளே அல்லது வெளியே இருப்பவரிடமிருந்து வரலாம்.
  கோபம், ஏமாற்றம், மன அழுத்தம், பொறாமை, பெருமை, ஆணவம், எதிர்மறை சொற்கள் ஆகியவை இருக்கலாம்.

குடிநீருக்கு சக்தி ஏற்றலாம்
  பிராணா சிகிச்சை கோல் கொண்டு நீருக்கு சக்தி அளிக்கலாம்.                    
  சக்தியூட்டப்பட்ட நீரை அருந்தினால் பிராணா உடலுள் செல்லும்.                                                

கோலின் பிறப் பயன்கள்
  மருந்துகளை சுத்தம் செய்தல்.                  
  காபி, தேநீர் மற்றும் பானங்களை அருந்தும் முன் சுத்தம் செய்தல்.         
  உணவில் எதிர்மறை சக்தியை சுத்தப்படுத்தி நீக்குதல்.