பிராணா
வயலெட் ஹீலிங் என்றால் என்ன?
இது ஒரு
மருந்தில்லாமல், தொடாமல், பிராணாவைக் கொண்டு செய்யும் சிகிச்சை முறை ஆகும்.
பிராணா
சிகிச்சை என்றால் என்ன?
சிகிச்சை
தேவைப்படும் இடத்திற்கு தேவையான பிராணா ஓட்டத்தை அளித்து எனர்ஜி உடல் மற்றும் பரு
உடலை சரிசெய்வதே பிராணா சிகிச்சை முறை ஆகும்.
பிராணா
என்றால் என்ன?
பிராணா என்பது நம்மை சூழ்ந்துள்ள உயிர்ச் சக்தி, இது நம்மைச் சுற்றி உள்ளது. பூமி,சூரிய மண்டலம் மற்றும் பிரபஞ்சத்தைச் சூழ்ந்துள்ளது. சமஸ்கிருதத்தில் ‘பிராணா’, சீனத்தில் ‘ச்சீ’, ஜப்பானில் ‘கீ’, பாலினேசியனில் ‘மனா’, மேற்கத்திய நாடுகளில் ‘லைப் ஃபோர்ஸ்’, பரமஹம்ஸ யோகானந்தரால்
‘லைப் ட்ரான்ஸ்’ என்றும் வழங்கப்படுகிறது.
பிராணா
எங்கிருந்து வருகிறது?
பிராணா சூரியன்,
பூமி மற்றும் அண்டவெளியில் இருக்கிறது. முறையே சூரிய பிராணா, பூமி பிராணா மற்றும்
பிரபஞ்ச பிராணா அல்லது பிரபஞ்ச சக்தி என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் கிடைக்கும்
பிராணா பிற வடிவங்களாக மாற்றப்படுகிறது. காற்று, மரங்கள், தெய்வீக இடங்கள்,
தெய்வீக மனிதர்கள், ஸ்படிக கற்கள், குறிப்பிட்ட புனிதச் சின்னங்கள் மற்றும்
பொருட்களும் பிராணாவை வழங்குகின்றன.
பிராணா
வயலெட் சிகிச்சை எவ்வாறு நடைபெறுகிறது?
பிராணா சிகிச்சை
கோல் மூலமாக சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த கோல் மூலம் பிராணா தேவைப்படும்
‘எனர்ஜி உடலி’ல் செலுத்தப்படுகிறது. அதன்மூலம் பரு உடல்
பிராணாவை பெற்று குணமடைந்து புதுப்பிக்கப்படுகிறது.
பிராணா சிகிச்சை கோல் (PHW) என்றால் என்ன?
பிராணா சிகிச்சை கோல் (PHW) என்பது பிராணா, சீ அல்லது லைப் ஃஃபொர்ஸ் உற்பத்தி செய்யும் ஒரு தெய்வீக
சின்னமாகும். இது எளிதான உபயோகத்திற்காக கோல் வடிவில் செய்யப்பட்டுள்ளது. இந்த
தெய்வீகப் பிரபஞ்ச சின்னத்தில் இருந்து வரும் சக்தியானது எனர்ஜி உடலை சரிசெய்து
குணமடையச் செய்கிறது.
பிராணா சிகிச்சை கோல் எதனால்
செய்யப்பட்டுள்ளது?
ப்ளாஸ்டிக்-கினால்
செய்யப்பட்டுள்ளது. ஆராவை கண்டறிய மற்றும் குணப்படுத்த எளிதான வடிவில்
செய்யப்பட்டுள்ளது. எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்
இரு பகுதிகளில் ஒன்று ஆராவை உணரவும், மற்றொன்று பிராணா சக்தியை அளித்து சிகிச்சை
அளிக்கவும் பயன்படும்.
“பிராணா சிகிச்சை கோல்” எங்கிருந்து உருவாக்கப்பட்டது?
இந்தோனேசியாவின்
கண்டியில் உள்ள ஜோக்ஜகர்த்தாவில் 35 பவுர்ணமி தியானம் செய்த
பின் கிடைத்தது. பழமையான போரொபுதூர் நினைவுச் சின்னமான மேக்லாங், ஜாவா,
இந்தோனேசியாவில் இருந்து கிடைத்தது. போரொபுதூர் பழைய உலகின் 7
அதிசயங்களில் ஒன்றாகும். போரொபுதூரில் உள்ள தேவராஜா மற்றும் பிரபஞ்ச சக்திகளால் “பிராணா
சிகிச்சை கோல்” ஆசிர்வதிக்கப்பட்டு ப்ரோக்கிராம் செய்யப்பட்டது.
கோலை
சுத்தம் செய்வதும், கோலின் எதிர்மறை சக்திகளை நீக்குவதும்
அவசியமா?
கோலை
தேவைப்பட்டால் ஈர துணியினால் சுத்தம் செய்வதை தவிர எவ்விதமான தூய்மைப்படுத்துதலும்
தேவையில்லை. கோலில் இருந்து பிராணா தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
‘பிராணா
சிகிச்சைக் கோல்’ நோய் சக்தியால் பாதிக்கப்படுமா?
கோலில் இருந்து பிராணா
சக்தி தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், பிராணா சிகிச்சை கோல் நோய் சக்தியால்
பாதிப்படையாமல் தூய்மையாக இருக்கிறது.
கோலிற்கு
சக்தியூட்ட வேண்டுமா மற்றும் கால வரையறை ஏதும் உள்ளதா?
கோல் ஏற்கனவே
சக்தியூட்டப் பட்டிருப்பதால், தனியாக சக்தியூட்டத் தேவையில்லை. கால வரையறை ஏதும்
இல்லை. எதனால் கோல் செய்யப்பட்டிருக்கிறதோ அதன் காலம் வரை உபயோகப்படுத்தலாம்.
எல்லையில்லா காலம் வரை சக்தி வந்தவாரே இருக்கும்.
சிகிச்சை
அளிக்க கோலை எவ்வாறு உபயோகப்படுத்துவது?
எளிதான நான்கு
சிகிச்சை முறையை பின்பற்றி கோலினால் சிகிச்சை அளிக்கலாம். ஆராவை சுத்தம் செய்தல்,
இட-பிங்கலா சமன் செய்தல், சக்கரத்தை சீர் செய்தல் மற்றும் தேவையான இடத்தில்
சிகிச்சை அளித்தல். இவை அனைத்தும்
கற்றுத் தரப்படும்.
பிராணா
சிகிச்சை கோல் ஏதாவது மதத்தை அடிப்படையாக கொண்டுள்ளதா?
இல்லை, எந்த
மதத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. கோல் சூட்சும உடலை குணமாக்க
உபயோகப்படுத்தப்படுகிறது. எந்த மதம் மற்றும் இனத்தவரும் கற்று சிகிச்சை
அளிக்கலாம்.
யார் பிராணா
வயலெட் சிகிச்சை கற்றுக் கொள்ளலாம்?
5 வயதிற்கு மேற்பட்ட யாரும் அல்லது கோலை பிடிக்க முடிந்த
யாரும் இந்த சிகிச்சை முறையை கற்றுக் கொள்ளலாம்.
வேறு சிகிச்சை
முறையை செய்து கொண்டிருக்கும் நானும் பிராணா வயலெட் சிகிச்சையை கற்றுக் கொள்ளலாமா?
ஆம், பிராணா
வயலெட் சிகிச்சை அனைத்து வித சிகிச்சை முறையுடனும் சேர்த்து செய்யக் கூடியது. அனைவரும்
எளிதாகக் கற்று உபயோகிக்கும் முறையில் உள்ளது.
யாரேனும்
குரு அல்லது மாஸ்டர் உள்ளாரா?
இல்லை, குரு
எவரும் இல்லை. அனைவருக்கும் முதன்மையான இறைவனும், இறை சக்தியுமே ஒரே குரு ஆவார்.
நாங்கள் போரோபுதூரில் உள்ள தேவராஜா மற்றும் பிரபஞ்ச சக்திகளின் உதவியுடன் மட்டுமே
சிகிச்சை அளிக்கிறோம்.
பிராணா
வயலெட் சிகிச்சை வகுப்பின் போது ஏதேனும் மந்திரம் ஜபிக்க வேண்டுமா?
இல்லை,
மற்றவருக்கு சிகிச்சை அளிக்கும் எண்ணம் அல்லது தான் குணமடைய வேண்டும் என்ற எண்ணம்
மட்டுமே போதுமானதாகும்.
எவ்விதமான
நோய்கள் பிராணா சிகிச்சை கோலினால் சரி செய்ய முடியும்.?
மனித சூட்சும
உடலில் ஆரம்பிக்கும் அனைத்து நோய்க்கும் சிகிச்சை அளிக்கலாம். சூட்சும உடலை சரி
செய்வதின் மூலம் பரு உடலும் சீக்கிரமே குணமடைகிறது. தெய்வீக குறுக்கிடுதல் அல்லது
நோயாளியைக் கொண்டு கர்மாவை சமன் படுத்துதல் தேவைப்படும் “கர்ம நோய்கள்” அல்லாது
மற்ற அனைத்து நோயும் குணப்படுத்த முடியும்.
சூட்சும
உடல்கள் யாவை?
பரு உடலை சுற்றியுள்ள சக்தி உடல்களே சூட்சும
உடல்கள் ஆகும். பரு உடல் என்பது கண்ணால் பார்க்கக் கூடிய உடல் பாகங்கள் மற்றும் கண்ணால்
பார்க்க முடியாதபடி உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகளும் சுரப்பிகளும் ஆகும்.
சூட்சும உடல் என்பது உடலின் உள்ளேயும் ஊடுருவி, உடலுக்கு வெளியிலும் விரிந்து
இருக்கும். சூட்சும உடல் என்பது எனர்ஜி உடல், அஸ்ட்ரல்(எமோஷனல்) உடல், மெண்டல்
உடல் மற்றும் காரண உடல்களின் தொகுப்பாகும்.
சூட்சும் உடல்கள் நமது ஆரோக்கியத்தை
எவ்வாறு பாதிக்கிறது?
பரு உடலின் உள்ளே
இரத்த ஓட்டம் இருப்பதைப் போன்று சூட்சும உடலில் சக்தி ஓட்டம் நடைபெறுகின்றது. சக்தி
ஓட்டத்தில் தடை ஏற்படும் போது அது வலி, அசௌகரியம் அல்லது நோய் எற்பட வழி
வகுக்கும்.
இந்த
சூட்சும உடல்கள் எதனால் செய்யப்பட்டது?
சூட்சும உடல்கள் பிராணா, சீ அல்லது
லைஃப் ஃபோர்ஸால் ஆனது.
பிராணாவும்
‘கீ’யும் ஒன்றா?
ஆம்,
சமஸ்கிருதத்தில், பிராணா என்றும், சீன
மொழியில் ‘கீ’ என்றும் அழைக்கப்படும் இது ‘உயிர் சக்தி’ யை உலகின் பல்வேறு
பகுதியில் குறிப்பிடும் சொற்களாகும்.
நாமே
நமக்கான பிராணாவை உற்பத்தி செய்ய முடியுமா?
ஆம், முடியும்.
சுவாசப் பயிற்சி, தியானம், சீ-குங் மற்றும் யோகப் பயிற்சியின் மூலம் நாமே நமது பிராணாவை
உற்பத்தி செய்து கொள்ளலாம்.
ஆரா
என்றால் என்ன, அது எதனால் செய்யப் பட்டுள்ளது?
ஆரா என்பது சக்தி
உடல்களின் தொகுப்பாகும். ஆரா என்பது நம் உடலைச் சுற்றியுள்ள சூட்சுமமான சக்தியால்
ஆனது. அது பிராணாவால் செய்யப்பட்டுள்ளது. மிருகங்கள், செடிகள்,
பழங்கள், ஸ்படிகங்கள், உணவு, நீர், என அனைத்திற்கும் ஆரா உண்டு. நமது ‘பூமி’க்கும்
அதற்கான ஆரா உண்டு.
ஆரா
வண்ணமயம் ஆனதா?
ஆம், ஆரா
வண்ணமயம் ஆனது. வானவில்லைப் போன்றே அதன் நிறம் சுற்றியுள்ள ஒளி சக்தியிடமிருந்து
பெறப்படுகிறது.
ஆரா-வை
பார்க்க முடியுமா?
சிலர்
பிறவியிலேயே ‘ஞான திருஷ்டி’ யுடன்
பிறந்திருப்பர், அவர்களால் ஆராவை பார்க்க முடியும். தியானம் மற்றும் குறிப்பிட்ட
ஆன்மீகப் பயிற்சியின் மூலமாகவும் ஞான திருஷ்டியை பெறலாம். கிர்லியன் புகைப்படம்
மூலமாகவும் ஆராவை புகைப்படம் எடுக்க முடியும்.
சூட்சும சக்தி
நமது ஆரோக்கியத்தை பாதிக்குமா?
ஆம், பரு உடலின்
நலனிற்கு சூட்சும சக்தி மிகவும் அவசியம். மேலும் உபயோகப்படுத்திய சக்தியும்,
அழுக்கான சக்தியும் நீக்கப்பட வேண்டும். நீக்காவிட்டால் பரு உடலின் நலனை
பாதிக்கும். சூட்சும உடல் எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவிற்கு பரு உடலின்
நலனை பாதிக்கும்.
இந்த சிகிச்சை
முறையில் நோயாளிக்கோ அல்லது சிகிச்சை அளிப்பவருக்கோ ஏதாவது பக்க விளைவு ஏற்படுமா?
பிராணா வயலெட்
கோல் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை முறையில் நோயாளிக்கோ அல்லது சிகிச்சை
அளிப்பவருக்கோ எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது.
நோயாளி
குணமடைய எவ்வளவு நாள் ஆகும்?
தலைவலி, வாயு
பிடிப்பு, வயிற்று வலி போன்றவை 3 முதல் 4 நிமிடங்களிலேயே குணமடையும். மற்ற நோய்கள்
நீண்ட நேரம் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதின் மூலம் குணமடையும். காய்ச்சல் குணமாகும்
வரை ஒவ்வொரு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சிகிச்சை அளிக்க வேண்டும்.
பிராணா
வயலெட் கோல் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை முறையை கற்றுக் கொள்ள நீங்கள்
சைவமாக மாற வேண்டுமா?
இல்லை, சிகிச்சை செய்வது
கோல் மட்டுமே நீங்கள் அல்ல. ஆகவே, சிகிச்சை அளிப்பவர் தொடர்ந்து அவர் வாழ்க்கை
முறையை கடைப்பிடிக்கலாம்.
பிராணா
வயலெட் கோல் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை முறையை கற்க நீங்கள் தியானம் செய்ய
வேண்டுமா?
இல்லை. நீங்கள்
ஏற்கனவே தியானப் பயிற்சி செய்து கொண்டு இருந்தால் அது சிகிச்சை முறையை கற்க ஏதும்
பாதிக்காது.
இந்த
சிகிச்சை முறையில் எத்தனை கட்டம் உள்ளது?
ஆராவை உணர்தல்
மற்றும் பிராணா சிகிச்சை ஆகிய சுலபமான இரண்டு கட்டம் உள்ளது. பிராணா சிகிச்சையில்
மொத்தம் நான்கு கட்டம் உள்ளது. ஆராவை தூய்மைப்படுத்துதல், இட-பிங்கலா சமன்
செய்தல், சக்கராவை சீராக்குதல் மற்றும் தேவையான இடத்தில் சிகிச்சை அளித்தல்.
ஆராவை
தூய்மைப் படுத்துதல் என்றால் என்ன?
இந்த முறையில்
ஆராவில் இருந்து நோய் சக்தி, அழுக்கான சக்தி அல்லது தேவையற்ற சக்திகள் வெளியேற்றப்
படுகிறது.
இட-பிங்கலா
சமன் செய்தல் என்றால்
என்ன?
இம்முறை நமது
நரம்பு மண்டலத்தை சீர் செய்கிறது. இடகலை மற்றும் பிங்கலை நாடிகளின் பிராணா சக்தி
ஓட்டத்தை சமன் செய்கிறது. நரம்பு மண்டலத்தில் சீரான பிராணா சக்தி ஓட்டம் முழு உடல்
மற்றும் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு காரணமாக அமைகிறது.
சக்கரங்களை
சீரமைத்தல் என்றால் என்ன?
இம்முறையில்
ஒவ்வொரு சக்கரமும் தனித்தனியாக சீரமைக்கப் படுகிறது. சில சக்கரங்கள் தேவைக்கு
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படும்; இந்த சிகிச்சை கட்டத்தில் அவை சமன்
செய்யப்பட்டு அதன் இயல்பான இயக்கத்திற்கு கொண்டு வரப்படும்.
தேவையான
இடத்தில் சிகிச்சை அளிப்பது என்றால் என்ன?
பிராணா
ஓட்டத்தில் தடை இருக்கும் இடத்தில் ‘பிராணா சிகிச்சை கோல்’- மூலமாக தேவையான பிராணா
சக்தியை அளித்து தடைகளை நீக்கி, சக்தி ஓட்டத்தை சீராக ஆக்குவதே இம்முறை ஆகும்.
முழங்காலில் வலி இருந்தால் அவ்விடத்தில் சிகிச்சை கோலை காண்பிக்க வேண்டும்.
பிராணா
சிகிச்சை அளிப்பதற்கு வலிமையான சக்தி உடல் தேவையா?
இல்லை, கோலின்
மூலமாக மட்டுமே சிகிச்சை நடைபெறுகிறது. சிகிச்சையாளர் ஒரு கருவி மட்டுமே.
சிகிச்சை
அளிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
தலைவலி, பல்வலி,
வாயுப் பிடிப்பு போன்றவை பூரண குணமடைய 3 நிமிடங்கள் ஆகும். பிற நோய்கள் குணமடைய 10
நிமிடங்கள் ஆகும். மிகவும் சிக்கலான நோய்களுக்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள்
ஆகலாம்.
சுய
சிகிச்சை செய்து கொள்ளலாமா?
ஆம், பிராணா
சிகிச்சை கோலினால் சுயமாக சிகிச்சை செய்து கொள்வது மிகவும் எளிது. முறையாக சுய
சிகிச்சை செய்வதின் மூலம் சூட்சும உடலை சுத்தமாகவும் பிராணா சக்தியின் ஓட்டம்
சீராகவும் இருக்கும். தினமும் 5 நிமிடம் செலவில் சக்தி உடலை அழுத்தம், அழுக்கு
மற்றும் நோய் சக்திகள் இல்லாமல் பாதுகாக்கலாம்.
தொலை
தூர சிகிச்சை செய்யலாமா?
ஆம், பிராணா
சிகிச்சை கோலினால் உலகத்தில் உள்ள எவருக்கும் அவர் நேரில் இருப்பது போல சிகிச்சை
அளிக்கலாம்.
“மன்னிப்பு
அறிக்கை” என்றால் என்ன? எதற்காக?
இது சக்தி
உடலுக்கு வரும் ஆரோக்கியமற்ற தொடர்பினால் பரு உடலிற்கு வரும் பிரச்சினைகளை
நீக்குவதற்காக. அறிக்கை சக்தி உடலுக்கு வரும் அனைத்து கார்டுகளையும் நீக்கும். மருத்துவ
சிகிச்சை அளிக்க முடியாத கேன்சர், மன அழுத்தம், விவரிக்க முடியாத வலிகள், மற்றும்
நோய்கள் வருவதற்கு
இத்தகைய கார்டுகளே காரணம்.
கார்டுகள்
என்றால் என்ன?
கார்டுகள் என்பது
ஒருவருக்கு அறிந்தோ, அறியாமலோ வரும் சக்தி தொடர்பாகும், இது பரு உடலின்
ஆரோக்கியத்தை பாதிக்கும். கார்டுகள் சக்கரங்களிலோ, சக்தி உடலிலோ அல்லது உறுப்பின்
மீதோ வரலாம். கெட்ட எண்ணம் கொண்ட மனிதரிடம் இருந்து வரும் இத்தொடர்பானது ஆரோக்கியம்
சார்ந்த பிரச்சினைகளை உண்டாக்கலாம். நோயுற்றவரிடம் இருந்தும் உண்டாகும் கார்டுகள்
அவருக்கே பிரச்சினைகளை உண்டாகலாம்.
இந்த
கார்டுகளை நீக்க முடியுமா?
ஆம், மன்னிப்பு
அறிக்கை படிப்பதின் மூலம் பெரும்பான்மையான கார்டுகளை நீக்கலாம். பிடிவாதமான
கார்டுகளை பிராணா சிகிச்சை கோலினால் நீக்கலாம்.
பிராணா
சிகிச்சை கோல் வேறு மருத்துவம் அல்லது மாற்று மருத்துவத்திற்க்கு மாற்றாகுமா?
இல்லை, இது
அனைத்து விதமான சிகிச்சையுடனும் சேர்ந்து செய்யக்கூடியது. சூட்சும சக்தி உடலை
குண்மாக்குவதின் மூலம் அனைத்து சிகிச்சையும் சிறப்பாக செயல்பட்டு பரு உடலை வேகமாக
குணமடைய செய்யும்.
சக்ரா
என்றால் என்ன?
பரு உடலிற்கு
வெளியே சுற்றும் சுழலாக ஞான திருஷ்டி படைத்த பழங்கால யோகிகள் இதை கண்டனர். சக்ரா
என்பது சமஸ்கிருத வார்த்தை, அதன் அர்த்தம் சக்கரம் ஆகும். சக்கரம் என்பது சூட்சும
உடலில் இருக்கும் சக்தி மையமாகும். சக்கரங்கள் ஏராளமான வேலை செய்கிறது, அவற்றில் ஒன்று
உறுப்புகள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பரு உடலின் ஆரோக்கியம் காப்பது. அவை
பிராணா சக்தியை பெற்று தேவையான இடத்திற்கு பகிர்ந்தளிக்கும.
இந்த
சக்கரங்கள் எங்கே அமைந்துள்ளன?
சக்கரங்கள்
சூட்சும உடலில் அமைந்துள்ளன மற்றும் சில முதுகுதண்டிலும் மற்றும் பிற நாடிகளின்
வழியாக நரம்பு மண்டலத்திலும் இணைந்துள்ளன.
மனித
உடலில் மொத்தம் எத்தனை சக்கரங்கள் உள்ளன?
பெரும்பான்மையான
புத்தகங்களில் 7 சக்கரங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டிருந்தாலும் அவைத் தவிர மேலும்
நிறைய சக்கரங்கள் இருக்கின்றன. இச்சக்கரங்களை பெரிய சக்கரங்கள், சிறிய சக்கரங்கள்,
மிகச்சிறிய சக்கரங்கள் மற்றும் நுண் சக்கரங்கள் என பிரிக்கலாம்.
------
சக்கரத்தை
யவராலும் கண்டறிய முடியுமா?
ஆம், சிறிய
கைத்துடைக்கும் பேப்பரினால் செய்யப்பட்ட சிறிய பெண்டுலம ஊசலினால் சக்கரங்களை
கண்டறியலாம். சக்கரத்தை விட்டு 25மி.மீ அல்லது 1 இன்ச் தொலைவில் ஊசலைப் பிடித்தால்
சிறிது நேரத்தில் ஆட ஆரம்பிக்கும். பேப்பர் ஊசலானது கடிகார சுழற்சி, எதிர்மறை
கடிகார சுழற்சி, பக்கவாடு, நீளவாட்டம், முட்டை வடிவில் சுழலும் அல்லது ஏதும்
சுழற்சி இல்லாமலும் இருக்கும். சுழலும் விதமானது சக்கரங்களின் வெவ்வேறு நிலைமையை
காட்டுகிறது.
நாடி
என்றால் என்ன?
ஒரு சக்கரத்தில்
இருந்து மற்றொரு சக்கரத்திற்கும் உடலின் அனைத்து பாகத்திற்கும் பிராணா சக்தி
செல்லும் பாதையே நாடிகள். நாடிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால் பிராணா சக்தியின்
ஓட்டம் அவ்விடத்தில் குறைந்தோ அல்லது நின்றோ போகும், அதை தொடர்ந்து அந்த இடத்தில்
பிரச்சினை ஏற்படும்.
மொத்தம்
எத்தனை நாடிகள் உள்ளன?
தொன்மையான இந்திய
ஏடுகளில் 72,000 நாடிகள் இருப்பதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. சூட்சும உடலில் உள்ள முக்கியமான நாடிகள் இடா, பிங்கலா
மற்றும் சுஸுமுனா. முக்கிய நாடிகள் வழியாகப் பிராணா சக்தியானது முதுகு தண்டின்
இடது (இடா) பக்கமும், வலது (பிங்கலா) பக்கமும் மற்றும் முதுடு தண்டின் மீதும்
(சுஸுமுனா) பாய்கிறது. இந்த நாடிகள் சீனாவின் மெரிடியன் மற்றும் அக்குபங்க்சர்
புள்ளிகளை ஒத்திருக்கின்றன.
சுவாசம்
எப்படி பிராணாவை உருவாக்குகிறது?
நாம்
சுவாசிக்கும் போது பிராண வாயு (ஆக்ஸிஜன்) மட்டுமல்லாது காற்றில் உள்ள பிராணா
சக்தியையும் உள்ளே இழுக்கிறோம். அவை நாடிகளின் வழியாக சக்கரத்திற்கும் பிறகு உடல்
முழுவதற்கும் செல்கிறது. சில வகையான சுவாச பயிற்சி செய்வதின் மூலம் அபரிதமான பிராணாவை
உற்பத்தி செய்து, அதன் மூலம் உடல் முழுவதும் பிராணா சக்தியை பெற ஆரம்பிக்கும்.
பிராணா
வயலெட் சிகிச்சை முறையில் எவ்வகையான சுவாச பயிற்சி கற்றுத் தரப் படுகிறது?
எளிமையான
சுவாசம், பிராணா சுவாசம், யோகியின் சுவாசம் மற்றும் நாடி சமன்படுத்தும் சுவாசம்.
ஒற்றைத் தலைவலியால் அவதியுறும் ஒருவர் நாடி சமன்படுத்தும் சுவாசத்தை முறையாக
செய்வதின் மூலமாக எளிதாக வலி நிவாரணம் பெறலாம்.
அனைவரும் இந்த
சுவாசப் பயிற்சியை செய்யலாமா?
இவை அனைத்துமே
இயற்கையான சுவாச முறையாகும் ஆதலால் அனைவராலும் செய்ய முடியும். பிறந்த தருணத்தில்
இருந்தே நாம் இயற்கையாக சுவாசிக்கிறோம். குழந்தைகள் மற்றும் தூங்கும் போது
பெரும்பான்மையானவர்கள் இயற்கையான முறையில் சுவாசிப்பதை காணலாம். வளர வளர இயற்கை
முறையில் சுவாசிப்பதை நாம் மறந்து விடுகிறோம். மூக்கின் மூலமாக சுவாசிக்காமல்
வாயினால் சுவாசிக்கும் நிறைய மனிதர்களை நாம் நிறைய பார்க்கலாம்.
பிராணா
சிகிச்சை கோலினால் நீருக்கு சக்தியூட்ட முடியுமா?
தண்ணீர் அபரிதமான
பிராணாவை கொண்டுள்ளது மற்றும் பிராணா சிகிச்சை கோலினால் நீருக்கும்
சக்தியூட்டலாம். அந்த நீரை குடிப்பதின்
மூலம் உடல் புதுப்பிக்கப்படும்.
வெண்
மந்திரம், செய்வினை அல்லது எதிர்மறையான மாய வித்தைகளை பிராணா வயலெட் சிகிச்சையால் நீக்க முடியுமா?
ஆம். எளிதாக
நீக்கலாம். அம்மாதிரி விஷயத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தால்
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
மந்திரங்கள்
மற்றும் சாபத்தை நீக்க முடியுமா?
ஆம். எளிதாக
நீக்கலாம். எங்களை தொடர்பு கொண்டால் எவ்வாறு நீக்கலாம் என விவரிப்போம்.
வீடு,
அலுவலகம் மற்றும் மாளிகைகளை எதிர்மறை சக்தியை நீக்கி சுத்தப் படுத்த முடியுமா?
ஆம், எளிதாக
குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி 4 முதல் 5 நிமிடத்தில் நீக்கலாம்.
பிராணா
வயலெட் சிகிச்சை முறையை நான் பிறருக்கு கற்று தரலாமா?
நீங்கள்
தன்னம்பிக்கையுடன் சிகிச்சை அளிக்க ஆரம்பித்த உடன் பிறருக்கும் கற்றுத் தரலாம்.
இங்கு கற்று தரப்படும் அனைத்தையும் யாருக்கு வேண்டுமென்றாலும் நீங்கள் கற்றுத்
தரலாம். நாங்கள் இந்த அறிவை அனைவரும் பெற வேண்டும் என விரும்புகிறோம்.
பிராணா
சிகிச்சை கோலினால் சிகிச்சை அளிக்கும் போது நான் பணம் பெறலாமா?
பிராணா சிகிச்சை
கோலினால் சிகிச்சை அளிக்கும் போது நீங்கள் பணம் பெறுவதற்கு பதிலாக சிகிச்சையை
மெச்சி அன்புடன் தரப்படும் எதையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் நிறைய
நேரம் செலவழித்து சிகிச்சை அளித்தால், உங்கள் நேரத்திற்காக விலை பெறலாம்.
நோயுற்றவர் குணமடைந்த பின் பணம் பெறுவதே சிறந்தது மேலும் பெற்ற பணத்தில் ஒரு
பகுதியை தானம் செய்வது மேலும் சிறப்பு.
மற்றவருக்கு
பிராணா சிகிச்சை அளிப்பதால்
என்ன பலன்?
எளியவருக்கு
அளிக்கும் சிகிச்சை இறைவனுக்கு தொண்டு செய்வதற்கு சமமாகும் அதனால் நீங்கள் பல
மடங்கு வாழ்த்தை பெறுவீர்கள். நல்ல கர்மாவை ஏற்படுத்தி கொள்கிறீர்கள். நீங்கள்
மற்றவருக்கு எதை தருகிறீர்களோ அது பல மடங்காக உங்களுக்கு திரும்ப வரும் என்பதை
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிராணா
வயலெட் சிகிச்சை மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படுவது எதற்காக?
நாங்கள் அதை
இலவசமாக பெற்றதால் அனைவருக்கும் இலவசமாக தருகிறோம். இது இறைவனுக்கும் எங்களுக்கும்
இடையே உள்ள விஷயம்.
பிராணா
வயலெட் சிகிச்சையில் என்னென்ன வகுப்புகள் வழங்கப்படுகிறது?
அடிப்படை பிராண வயலெட் சிகிச்சை
செய்வினை
எதிர்மறை உணர்ச்சிகளை கண்டறிந்து நீக்குதல்
சாகும் கலை (நல்ல முறையில் உயிர் துறத்தல்)