எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெற வழிமுறை

“பிராணா சிகிச்சை கோல்”

உபயோகித்து

எமோஷனல்/அஸ்ட்ரல் உடல் மற்றும் மெண்டல் உடலில் இருந்து மன நோய்கள், ஆவி மற்றும் வஸ்துக்கள் நீக்க வழிமுறைகள்.


எதிர்மறை உணர்ச்சிகளை நீக்க வழிமுறைகள்


1) மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்க “பிராணா வயலெட் சிகிச்சை” முறையில் நிர்ணயித்தபடி முழுமையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

2) சிகிச்சை கோலைக் கொண்டு எமோஷனல்/அஸ்ட்ரல் உடலை உணர வேண்டும். முதலில் எனர்ஜி உடலை கோலின் உதவியால் கண்டறிய வேண்டும். அதன்பிறகு, எமோஷனல்/அஸ்ட்ரல் உடலை கண்டறிய வேண்டும். இது எனர்ஜி உடலில் இருந்து 2 முதல் 3 அடி வரை நீண்டு இருக்கும்.

3) சிகிச்சை கோலை கொண்டு மெண்டல் உடலையும் கண்டறிய வேண்டும். இது எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் இருந்து 3 முதல் 4 அடி வரை நீண்டு இருக்கும்.

4) மனரீதியான பிரச்சினையை கண்டறிய கோலை எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் வைத்து “மனரீதியான பிரச்சினை உள்ளதா?” என கேட்டு 10/15 நொடிகள் காத்திருக்கவும்.

5) பிரச்சினை இருந்தால் கோல் நகரும். பிரச்சினை இல்லாவிட்டால் கோல் நகராமல் அப்படியே இருக்கும். இதை உறுதிபடுத்த “மனரீதியான பிரச்சினை இல்லையா?” என கேட்டு கோல் நகர்வதை உணரலாம். கோல் தானாகவே நகரும். நோயாளியின் சக்தி நிலை/ ஆன்மாவில் தொடர்பு கொள்வதின் மூலம் இதை உறுதி செய்யலாம். (கவனிக்க: நீங்களாகவே கோலை நகர்த்தக் கூடாது, தானாகவே கோல் நகர வேண்டும்)

6) மனரீதியாக பிரச்சினை இருப்பது தெரிந்தால், கீழ்காணும் சாதாரணமாக வரும் மன பிரச்சினை ஒவ்வொன்றாக கேட்டு எது என உறுதி செய்யவும்.

a) நிறைவேறாத ஆசை
b) தொந்தரவு
c) துக்கம்
d) பயம்
e) கவலை ஆழ்ந்த துக்கம்
f) ஏமாற்றம்

7) எந்த விதமான எதிர்மறை உணர்ச்சி என கண்டறிந்த பின்பு அது வெளியில் இருந்து வருகிறதா அல்லது நோயாளியின் மனதில்/ஆழ்மனதில் இருந்து வருகிறதா என கண்டறிய வேண்டும்.

8) இந்த எதிர்மறை சக்தியை எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் இருந்து நீக்க வேண்டும்.

9) இதை செய்ய முதலில் எதிர்மறை சக்தியை ஏற்று, சீராக்கி பின்பு நேர்மறை சக்தியாக மாற்ற வேண்டும். உதாரணமாக ‘ஆண்களை வெறுக்கும்’ ஒரு எதிர்மறை சக்தியை எடுத்துக் கொள்வோம்.

எதிர்மறை உணர்ச்சி:

நான் ஆண்களை வெறுக்கிறேன், ஆண்கள் நம்பிக்கைக்குரியவர் இல்லை, ஆண்கள் உங்களை ஏமாற்றி விடுவர்.

10) கோலை உபயோகித்து, இந்த எதிர்மறை சக்தியை ஏற்றுக் கொள்ளவும், ஆக்னை சக்கரத்திலிருந்து 1 அடி தள்ளி கோலைப் பிடித்து இவ்வுறுதி மொழியினை சொல்லவும்.

நான் ஆண்களை வெறுக்கிறேன், ஆண்கள் நம்பிக்கைக்குரியவர் இல்லை, ஆண்கள் உங்களை ஏமாற்றி விடுவர்.

நான் இதை ஆழமாக, முழுமையாக, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

11) கோலை உபயோகித்து கீழ்காணுமாறு எதிர்மறை உணர்ச்சியை சீராக்கவும்.

என் தந்தை ஒரு நல்ல ஆண், என் தாத்தா ஒரு நல்ல ஆண். இந்த வாழ்நாளில் நான் நிறைய நல்ல ஆண்களை அறிவேன்.

நான் இதை ஆழமாக, முழுமையாக, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

12) கோலை அதே இடத்தில் காண்பித்து எதிர்மறை சக்தியை நேர்மறை சக்தியாக மாற்றவும்

நான் ஒரு ஆன்மா. எனக்குள் இருக்கும் ஆன்மா ஒரு ஆணோ, பெண்ணோ அல்ல. இவ்வாழ்நாளில் பெண்ணாக இருப்பது என் முன் வினைப்பயன் மற்றும் கடவுளின் தெய்வீகத் திட்டம். நான் இதை ஆழமாக, முழுமையாக, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

13) பிறகு எதிர்மறை உணர்ச்சி இருக்கிறதா என சோதிக்கவும். இருந்தால், அதை கண்டறியவும். பின், எங்கிருந்து வருகிறது என சோதித்து 9,10,11 & 12 குறிப்பின் படி நீக்கவும். பின்பு, இன்னும் இருக்கிறதா என மறு பரிசோதனை செய்யவும்.

14) எல்லா எதிர்மறை உணர்ச்சிகளையும் நீக்கிய பின், மெண்டல் உடலை சோதிக்கவும். மெண்டல் உடலில் ஏதும் எதிர்மறை உணர்ச்சி இருக்கிறதா என கண்டறியவும்.

15) எதிர்மறை உணர்ச்சி இருந்தால் 9,10,11 & 12 குறிப்பின் படி நீக்கவும்.

16) எமோஷனல்/அஸ்ட்ரல் மற்றும் மெண்டல் உடலில் ஏதும் கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்கள் மற்றும் ஆவிகளின் சேர்க்கைகளை கண்டறிய மேலும் தொடரவும்.

17) சிகிச்சை கோலை உபயோகித்து எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் ஏதாவது கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்கள் இருக்கிறதா என அறியவும். ஒரு தடவை ஒரே தெளிவான ஒரு கேள்வி மட்டுமே கேட்கவும்.

18) சிகிச்சை கோலின் சிகிச்சை அளிக்கும் முனையை எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் வைத்து கீழ்காணும் கட்டளையை பிறப்பிக்கவும்.

சிகிச்சை கோலே கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்களை இந்த ஒளி உடலில் இருந்து எரித்து நீக்கி விடு. (3 முறை)

(கோலை உணர்வு உடலில் 30 முதல் 45 நொடி வரை வைத்திருக்கவும்)

19) மறுபடியும் கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்கள் இருக்கின்றனவா என சோதிக்கவும். இருந்தால் 18 குறிப்பை பின்பற்றவும்.

20) வஸ்துக்களை கீழ்காணுமாறு வகைப்படுத்தலாம். குறிப்பிட்ட கேள்வியினால் அடையாளம் கண்டு நீக்கலாம்.

வஸ்துக்களின் வகைகள்:

a) பீடி வஸ்துக்கள் புகைப் பழக்கத்தை ஏற்படுத்தும்

b) குடி வஸ்துக்கள் குடிப் பழக்கத்தை ஏற்படுத்தும்

c) சூதாடு வஸ்துக்கள் சூதாட்டப் பழக்கத்தை ஏற்படுத்தும்

d) சக்தியை உறிஞ்சும் காட்டேரிகள்

e) காமம், கோபம், துக்கம் போன்றவை.

21) 18ஆம் குறிப்பை பின்பற்றி நீக்கவும்.

22) ஆவிகளை கண்டறிய, கோலின் உதவியால் ஆவி இருக்கிறதா என கேட்டு அறியலாம்.

23) ஆவிகளை நீக்க நோயாளியை “ஆன்மீக உறுதிமொழி” பக்கம் 1,2 & 3 சுமார் 3 முதல் 6 நாட்களுக்கு படிக்கச் சொல்லவும்.

24) மறுபடியும் சோதித்து, ஆவிகள் இருந்தால் ‘பிராணா வயலெட் ஹிலீங்’ கை தொடர்பு கொள்ளவும். ‘பிராணா வயலெட் சிகிச்சை’ பெற இ-மெயில், தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலமாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு எமது www.pranaviolethealing.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.