குரு வழிபாடு (WHITE MAGIC)

ஆன்மிக மற்றும் மனோ சக்திகளை எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உலக நன்மைக்காகவும், சக உயிர்களின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தினால் அது ‘வொயிட் மாஜிக்’ அல்லது ‘வெண் மந்திரம்’ எனப்படும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது.


குருமார்கள் மற்றும் ஆன்மிக பெரியோர் அறிந்தோ, அறியாமலோ நம்முடன் சக்தி தொடர்பை (Guru Cord) ஏற்படுத்தி கொள்கிறார்கள். இது பரம்பொருளுடனான நமது ‘இறைத் தொடர்பை’ (Divine Cord) பாதிக்கலாம். பரம்பொருளை அடைவதே ஆன்மாவின் லட்சியமாக இருக்க வேண்டும்.


வெண் மந்திரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் பரம்பொருளை விட்டு குருவை பின்பற்ற ஆரம்பித்து விடுகிறார். இது ஆன்ம முன்னேற்றத்திற்கு ஒரு பெரும் தடையாகும். குருவின் மூலமாக இறைவனை அடைவதை விட்டு, நாம் குருவையே அடைய முற்படுவது சரியல்ல.


ஆன்மிக உறுதிமொழியினை தினமும் படிப்பதன் மூலம் நாம் குருமார்கள்
மற்றும் ஆன்மிக பெரியோரிடம் இருந்து கற்க வேண்டியதைக் கற்று, அதே நேரம் (‘இறை தொடர்பை’ பாதிக்கும்) ஆழமான ஆன்மிக தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கலாம்.


உண்மையான ஆன்மிக பெரியோரை வழிபடுவதே தவறு என்றால், இப்பொழுது ஆன்மிகத்தை வியாபாரமாக்கி வரும் போலி குருமார்களை பின்பற்றினால் நமது கதி என்னவாகும் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். ஆன்மிக உறுதிமொழியினை தினமும் படிக்க மறவாதீர்கள்.