பிராணா சிகிச்சை கோல் உபயோகித்து நமது சக்தி உடலை குணப்படுத்தும் வழிமுறைகள்

1) நோயாளியுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்த, சிகிச்சை கோலை கொண்டு நோயாளியின் இடது கை பக்கத்தில் தொட்டு “நான் (நோயாளியின் பெயர்) எனர்ஜி உடலை உணர்கிறேன்” என்று அமைதியாக 3 முறை நினைக்கவும். இது ஆன்மாவுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்தச் செய்கிறது. இதை செய்யும் போது கவனமாகவும் பணிவுடனும் செய்யவும்.


2) கோலில் அழுத்தம் உணர்ந்து அது லேசாகும் வரை நகர்த்தவும். பின் மேற்கொண்டு முழு எனர்ஜி உடலையும் உணரவும். அதாவது இடது மேல்புறம், வலது மேல்புறம், தொடைக்கருகே இடது கீழ்புறம், வலது கீழ்புறம் ஆகியவை.

3) 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் 4 வது குறிப்பிற்கு செல்லவும்.

4) எனர்ஜி உடல் 2 அடிக்கு மேல் இருந்தால் ஆராவை தூய்மை படுத்தவும். உடலின் 4 புறமும் ஆரா தூய்மைப்படுத்த பட வேண்டும். ஒரு முறை ஆரா தூய்மை செய்த பின் மீண்டும் 4 புறமும் எனர்ஜி உடலை சோதித்து, 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் இன்னும் ஒரு முறை ஆராவை தூய்மைப் படுத்தவும். மறுபடியும் சோதனை செய்யவும்.

5) இடை-பிங்கலை நாடிகளை சமன் செய்யவும்.

6) எனர்ஜி உடல் 2 முதல் 3 அடிக்குள் இருக்கிறதா என சோதிக்கவும். நான்கு புறத்திலும் இதே போல் இருக்க வேண்டும்.(மேல் வலது & இடது மற்றும் கீழ் வலது & இடது.

7) மேல் வலது & இடது புறம் சமமாக இல்லாவிடில் சமமாகும் வரை தொடர்ந்து இடை பிங்கலை நாடிகளை சமன் செய்யவும்.

8) மேல் இரு புறம் சமன் செய்த பின், கீழே சமமாக இல்லாவிட்டால் குறிப்பு 9 செல்லவும்.

9) மூலாதார சக்கரத்தை கண்டறிந்து சரிப்படுத்தவும். பிறகு, கீழே இருபுறமும் எனர்ஜி உடலை உணர்ந்தால் சமமாக இருக்கும்.

10) ஆராவை தூய்மைப்படுத்துதல் மற்றும் இடை பிங்கலை சமப்படுத்துதல் செய்த பின், ஆரா 2 முதல் 3 அடிக்குள் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால்,நோயாளிக்கு நிறைய எதிர்மறை கார்டுகள் இருக்கலாம். அவற்றை நீக்க வேண்டும். இடை பிங்கலை சமன் செய்வதை தொடரவும்.

11) நோயாளியை மன்னிப்பு அறிக்கை பக்கம் 1,2,3 (+4,5 மணமாகியிருந்தால்) (+7 விவாகரத்து, முன்னால் காதலன், கள்ளத் தொடர்பு இருந்தால்) (+6 உடன் வேலை பார்க்கும் அனைவருக்கும், அண்டை வீட்டினருக்கும்) படிக்கச் சொல்லவும். 2 மற்றும் 3 பக்கத்தை படிப்பது மிகவும் அவசியம்.

12) ஸோலார் ப்ளெக்சஸ் சக்கரத்தில் கார்டுகள் மற்றும் தடைகள் உள்ளதா என சோதித்த பின்பு மற்ற சக்கரங்களை சோதிக்கவும். கார்டுகள், பிற வலி உள்ள இடங்கள் மற்றும் உள்ளுறுப்புக்களிலும் இருக்கலாம்.

13) கார்டுகள் ஏதும் இல்லையென்றால் சக்கரங்களை சரிப்படுத்த ஆரம்பிக்கலாம்.(22 குறிப்பு முதல்)

14) கார்டுகள் இருந்தால் அவை உள்ளே வருகிறதா அல்லது வெளியில் செல்கிறதா என சோதிக்கவும்.

15) அவ்விடத்தில் எத்தனை கார்டுகள் உள்ளது என அறியவும்.

16) கார்டு எங்கிருந்து வருகிறது என உங்களுக்குள் மெதுவாக கேட்டு அறியவும் “குடும்பத்தினுள் இருந்தா, திருமண உறவின் மூலமாகவா, வேலை பார்க்கும் இடத்தில் இருந்தா,வெளியில் இருந்தா” போன்றவை.

17) கார்டுகள் அனுப்புவது ஆணா, பெண்ணா, எந்த இனத்தவர் என கேட்டு, நோயாளிக்கு கார்டுகள் அனுப்பும் நபர் யார் என கண்டறிய உதவலாம்.

18) கார்டுகள் அனுப்பும் நபரை பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரிந்த உடன், நோயாளியை ஒரு நபரை நினைக்கச் சொல்லி, அவர் தான் கார்டுகள் அனுப்புபவரா என அறியவும். கார்டுகளை அனுப்பும் நபர் அவராக இல்லாவிட்டால், கோல் நின்று விடும், எனர்ஜி உடலை தாண்டிச் செல்லாது. கார்டுகளை அனுப்பும் நபர் அவராக இருந்தால், கோல் எனர்ஜி உடலை தாண்டி நகர்ந்து கொண்டே இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்டவரிடமிருந்து கார்டுகள் வந்தால், ஒவ்வொரு நபராக நினைக்கச் சொல்லி கண்டறியவும்.

19) பிறகு நோயாளி அந்த நபருக்கான மன்னிப்பு அறிக்கையை (பக்கம் 6) படிக்க வேண்டும்.

20) சோதனையில் கார்டுகள் இன்னும் இருப்பது தெரிந்தால் நோயாளியை பக்கம் 7 ஐ படிக்கச் சொல்லவும்.

21) 7ஆம் பக்கம் படித்த பின்பும் கார்டுகள் இருந்தால் அது சாம்பல்/ கருப்பு/ வெண் மந்திர கார்டா என சோதிக்கவும்.

22) சாம்பல்/ கருப்பு மந்திரம் ஸோலார் ப்ளெக்சஸ் சக்கரத்திலும் மற்ற பிற சக்கரங்களிலும் இருக்கும். வெண் மந்திரம் ஆஜ்னா அல்லது சகஸ்ரார சக்கரத்தில் ஒன்றில் மட்டுமோ அல்லது இரண்டிலுமோ இருக்கும்.

23) ஆமென்றால் நோயாளியை “நானே” உறுதிமொழி மற்றும் ஆன்மீக ஆற்றல் அறிக்கையை படிக்க செய்து, மந்திரங்களை நீக்க “பிராணா வயலெட் ஹீலிங்”கை தொடர்பு கொள்ளவும். சாம்பல்/ கருப்பு/ வெண் மந்திரத்தை நீக்காமல் நோயாளி குணமடைய முடியாது.

24) வெண் மந்திரத்தை ஆஜ்னா மற்றும் சகஸ்ரார சக்கரத்திலும் சோதிக்கவும்.

25) “நானே” உறுதிமொழி மற்றும் ஆன்மீக உறுதிமொழியையும் தொடர்ந்து படிப்பதின் மூலம் வெண் மந்திரத்தை எளிதாக நீக்கலாம்.

26) எல்லா கார்டுகளையும் நீக்கிய பின் சக்கரங்களை சரி செய்ய ஆரம்பிக்கவும். அடுத்த 27ம் படிக்குச் செல்லும் முன் கார்டுகள் அனைத்தையும் நீக்க வேண்டியது அவசியம்.

27) எல்லா சக்கரங்களையும் கீழ்காணும் வரிசைப்படி சரி செய்ய ஆரம்பிக்கவும்.

முன்பக்க ஸொலார் ப்ளக்சஸ், இருதயம், தொப்புள், தொண்டை, செக்ஸ் மற்றும் ஆக்னா, பின்பக்க ஸொலார் ப்ளக்சஸ், இருதயம், தொப்புள், தொண்டை, மூலாதாரம் மற்றும் பின்புற ஆக்னா,மூலாதாரம், பாதம், உள்ளங்கை மற்றும் சகஸ்ராரம். கடைசியாக கீழ்நிலை சக்கரங்கள்.


28) சக்கரங்களின் அளவை சரி பார்க்கவும், சராசரியான நபரின் பெரிய சக்கரம் 8 முதல் 10 இன்ச்சும், சிறிய சக்கரம் 4 முதல் 5 இன்ச்சும் மற்றும் மிகச் சிறிய சக்கரம் 1 அல்லது 2 இன்ச் அளவிலும் இருக்கும்.

29) சக்கரத்தை அவை சதாரண அளவில் இருந்தாலும் எந்த நேரத்திலும் சரிப்படுத்தலாம். சக்கரங்கள் அதிகமான செயல்பாட்டின் போது 6 அடிக்கும் மேலாக பெரியதாக இருக்கும். குறைவாக செயல்படும் போது 1 இன்ச்சிற்கு குறைவாகவும் இருக்கும்.

30) சக்கரத்தை சரி செய்ய அதன் அளவை கணக்கிட வேண்டும். கோலை அதன் வெளி ஓரத்தில் வைத்து கடிகார சுழற்சியாக 5 முறை சுற்ற வேண்டும். பின் கோலை நடுவில் வைத்து 5 எண்ணிக்கை நிறுத்தவும்.

31) மறுபடியும் சோதித்து சக்கரம் சரியான அளவிற்கு வரும் வரை 30ம் குறிப்பின் படி தொடர்ந்து செய்யவும்.

32) நோயாளியின் நிலைமை சீராகும் வரை தொடர்ந்து செய்யவும். மேலும் நோயாளியை இப்படி கேட்கலாம் “சிகிச்சைக்கு முன் 10 எண்ணிக்கை வலி இருந்ததாக வைத்தால், இப்போது சிகிச்சைக்கு பின் எவ்வளவு எண்ணிக்கை குறைந்துள்ளது?


பிற சக்கரம் அல்லாத வலியுள்ள இடங்கள்

33) நோயாளிக்கு உடலில் வேறு இடத்தில் எங்காவது வலி உள்ளதா? எனக் கேட்டறியவும்.

34) அவ்விடத்தில் சக்தி உடலை சோதித்து சிகிச்சை அளிக்கவும். நீங்கள் சிகிச்சையை பெரிதாக உள்ள சக்தி உடலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சக்தி ஒரே இடத்தில் சேர்ந்திருக்கலாம், அவ்விடத்தில் சக்தி சீராகும் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும். நோயாளி 80 முதல் 90 சதவீதம் வரை வலி குறைந்ததாக உணர்வார்கள். அடிக்கடி தொடர்ந்து சிகிச்சை அளிப்பதின் மூலம் பூரணமாக அவ்விடத்தில் வலி நிவாரணம் அடையலாம்.

35) நீண்ட கால நோய்களான சர்க்கரை வியாதி, கல்லீரல் தொடர்பான பிரச்சினை, ஆஸ்த்துமா, போன்றவற்றை நீக்க அதன் தொடர்புடைய உள்ளுறுப்பை கோலின் மூலம் குணமாக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியே உணர்ந்து சிகிச்சை அளிக்கலாம், அதற்கு முன்பாக அதன் அருகே உள்ள சக்கரத்தை சரியாக்க வேண்டியதும் அவசியம்.

36) எல்லா சக்கரத்தையும் அதன் இயற்கையான அளவிற்கு சரி செய்த பின், மண்ணீரல் சக்கரத்திற்கு சக்தி ஊட்டலாம். மண்ணீரல் சக்கரத்தின், சக்தி உடலில் கோலைப் பிடித்து பத்து முறை சுழற்றிய பின் மண்ணீரல் சக்கரத்தின் நடுவில் வைத்து 10 எண்ணிக்கை நிறுத்தவும். எனர்ஜி உடலை மறுபடியும் சோதித்து, எனர்ஜி உடல் அதிகரித்திருப்பதை உறுதி செய்யவும்.