பிராணா வயலட் ஹீலர் மற்றும் பிராணா வயலட் சிகிச்சை பெறும் அனைவரின் கவனத்திற்கு
1) பிராணா வயலட் ஹீலிங் என்பது கண்டிப்பாகத் தொடாமல் செய்யும் சிகிச்சை
முறை ஆகும்.
2) சிகிச்சை பிராணா சிகிச்சை கோலின் மூலமாக மட்டுமே செய்யப்படும், கைகளினால்
அல்ல.
3) எவ்வித சூழ்நிலையிலும் நோயாளியை நாங்கள் தொட மாட்டோம்.
4) சிகிச்சை அளிக்க உடலின் எந்த பாகத்தையும் நாங்கள் பார்க்கவோ அல்லது தொடவோ
மாட்டோம். நாங்கள் குறைந்த பட்சம் ஒரு அடி தூரத்தில் நின்று கொண்டு சக்தி உடல் /
ஆராவில் மட்டுமே சிகிச்சை அளிப்போம்.
5) சிகிச்சை பெறுபவரை தனியாகவோ / தனிமையான இடத்திற்கோ அழைத்து செல்ல மாட்டோம்.
சிகிச்சை அனைவரின் முன்பும் செய்யப்படும்.
6) மத சார்பான இடத்திற்கோ/ கோவில் போன்ற இடங்களுக்கோ எங்களுடன் வருமாறு சிகிச்சை
பெறுபவரை அழைக்க மாட்டோம்.
7) ஆன்மா/ செய்வினை இருப்பதாக கண்டறிந்தால் கண்டிப்பாக திரு. P. சிவா அவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்து அதை நீக்க வேண்டும்.
8) வேறு எவருக்கும் ஆன்மா/செய்வினை சக்திகளை நீக்கும் பயிற்சியோ/ அதிகாரமோ
வழங்கப்படவில்லை.
9) பிராணா வயலட் பயிற்சி வகுப்புகள் வழக்கமாக போட் கிளப் லான் (இந்தியா கேட்
அருகே), புது தில்லியில் நடைபெறுகிறது. அங்கு திரு.சிவா.P அவர்களால் தொலைவில் இருந்தே சிகிச்சையும் அளிக்கப்படும்.
குறிப்பு: மேலே உள்ள பிராணா வயலட் ஹீலிங் விதிகளை பின்பற்றாதவர்கள் பிராணா வயலட் ஹீலர் அல்ல என்பதை அறியலாம்.