கேள்வி பதில் (FAQS)


கோலை சுத்தம் செய்வதும், கோலின் எதிர்மறை சக்திகளை  நீக்குவதும் அவசியமா? 
கோலை தேவைப்பட்டால் ஈர துணியினால் சுத்தம் செய்வதை தவிர எவ்விதமான தூய்மைப்படுத்துதலும் தேவையில்லை. கோலில் இருந்து பிராணா தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
‘பிராணா சிகிச்சைக் கோல்’ நோய் சக்தியால் பாதிக்கப்படுமா?
கோலில் இருந்து பிராணா சக்தி தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், பிராணா சிகிச்சை கோல் நோய் சக்தியால் பாதிப்படையாமல் தூய்மையாக இருக்கிறது.
கோலிற்கு சக்தியூட்ட வேண்டுமா மற்றும் கால வரையறை ஏதும் உள்ளதா?
கோல் ஏற்கனவே சக்தியூட்டப் பட்டிருப்பதால், தனியாக சக்தியூட்டத் தேவையில்லை. கால வரையறை ஏதும் இல்லை. எதனால் கோல் செய்யப்பட்டிருக்கிறதோ அதன் காலம் வரை உபயோகப்படுத்தலாம். எல்லையில்லா காலம் வரை சக்தி வந்தவாரே இருக்கும்.
பிராணா சிகிச்சை கோல் ஏதாவது மதத்தை அடிப்படையாக கொண்டுள்ளதா?
இல்லை, எந்த மதத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. கோல் சூட்சும உடலை குணமாக்க உபயோகப்படுத்தப்படுகிறது. எந்த மதம் மற்றும் இனத்தவரும் கற்று சிகிச்சை அளிக்கலாம்.
யார் பிராணா வயலெட் சிகிச்சை கற்றுக் கொள்ளலாம்?
5 வயதிற்கு மேற்பட்ட யாரும் அல்லது கோலை பிடிக்க முடிந்த யாரும் இந்த சிகிச்சை முறையை கற்றுக் கொள்ளலாம்.
வேறு சிகிச்சை முறையை செய்து கொண்டிருக்கும் நானும் பிராணா வயலெட் சிகிச்சையை கற்றுக் கொள்ளலாமா?
ஆம், பிராணா வயலெட் சிகிச்சை அனைத்து வித சிகிச்சை முறையுடனும் சேர்த்து செய்யக் கூடியது. அனைவரும் எளிதாகக் கற்று உபயோகிக்கும் முறையில் உள்ளது.
யாரேனும் குரு அல்லது மாஸ்டர் உள்ளாரா?
இல்லை, குரு எவரும் இல்லை. அனைவருக்கும் முதன்மையான இறைவனும், இறை சக்தியுமே ஒரே குரு ஆவார். நாங்கள் போரோபுதூரில் உள்ள தேவராஜா மற்றும் பிரபஞ்ச சக்திகளின் உதவியுடன் மட்டுமே சிகிச்சை அளிக்கிறோம்.
பிராணா வயலெட் சிகிச்சை வகுப்பின் போது ஏதேனும் மந்திரம் ஜபிக்க வேண்டுமா?
இல்லை, மற்றவருக்கு சிகிச்சை அளிக்கும் எண்ணம் அல்லது தான் குணமடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதுமானதாகும்.
ஆரா-வை பார்க்க முடியுமா?
சிலர் பிறவியிலேயே ‘ஞான திருஷ்டி’ யுடன் பிறந்திருப்பர், அவர்களால் ஆராவை பார்க்க முடியும். தியானம் மற்றும் குறிப்பிட்ட ஆன்மீகப் பயிற்சியின் மூலமாகவும் ஞான திருஷ்டியை பெறலாம். கிர்லியன் புகைப்படம் மூலமாகவும் ஆராவை புகைப்படம் எடுக்க முடியும்.
இந்த சிகிச்சை முறையில் நோயாளிக்கோ அல்லது சிகிச்சை அளிப்பவருக்கோ ஏதாவது பக்க விளைவு ஏற்படுமா?
பிராணா வயலெட் கோல் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை முறையில் நோயாளிக்கோ அல்லது சிகிச்சை அளிப்பவருக்கோ எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது.
நோயாளி குணமடைய எவ்வளவு நாள் ஆகும்?
தலைவலி, வாயு பிடிப்பு, வயிற்று வலி போன்றவை 3 முதல் 4 நிமிடங்களிலேயே குணமடையும். மற்ற நோய்கள் நீண்ட நேரம் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதின் மூலம் குணமடையும். காய்ச்சல் குணமாகும் வரை ஒவ்வொரு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சிகிச்சை அளிக்க வேண்டும்.
பிராணா வயலெட் கோல் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை முறையை கற்றுக் கொள்ள நீங்கள் சைவமாக மாற வேண்டுமா?
இல்லை, சிகிச்சை செய்வது கோல் மட்டுமே நீங்கள் அல்ல. ஆகவே, சிகிச்சை அளிப்பவர் தொடர்ந்து அவர் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கலாம். 
பிராணா வயலெட் கோல் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை முறையை கற்க நீங்கள் தியானம் செய்ய வேண்டுமா?
இல்லை. நீங்கள் ஏற்கனவே தியானப் பயிற்சி செய்து கொண்டு இருந்தால் அது சிகிச்சை முறையை கற்க ஏதும் பாதிக்காது. 
பிராணா சிகிச்சை அளிப்பதற்கு வலிமையான சக்தி உடல் தேவையா?
இல்லை, கோலின் மூலமாக மட்டுமே சிகிச்சை நடைபெறுகிறது. சிகிச்சையாளர் ஒரு கருவி மட்டுமே.
சிகிச்சை அளிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
தலைவலி, பல்வலி, வாயுப் பிடிப்பு போன்றவை பூரண குணமடைய 3 நிமிடங்கள் ஆகும். பிற நோய்கள் குணமடைய 10 நிமிடங்கள் ஆகும். மிகவும் சிக்கலான நோய்களுக்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆகலாம்.
சுய சிகிச்சை செய்து கொள்ளலாமா?
ஆம், பிராணா சிகிச்சை கோலினால் சுயமாக சிகிச்சை செய்து கொள்வது மிகவும் எளிது. முறையாக சுய சிகிச்சை செய்வதின் மூலம் சூட்சும உடலை சுத்தமாகவும் பிராணா சக்தியின் ஓட்டம் சீராகவும் இருக்கும். தினமும் 5 நிமிடம் செலவில் சக்தி உடலை அழுத்தம், அழுக்கு மற்றும் நோய் சக்திகள் இல்லாமல் பாதுகாக்கலாம்.
தொலை தூர சிகிச்சை செய்யலாமா?
ஆம், பிராணா சிகிச்சை கோலினால் உலகத்தில் உள்ள எவருக்கும் அவர் நேரில் இருப்பது போல சிகிச்சை அளிக்கலாம். 
“மன்னிப்பு அறிக்கை” என்றால் என்ன? எதற்காக?
இது சக்தி உடலுக்கு வரும் ஆரோக்கியமற்ற தொடர்பினால் பரு உடலிற்கு வரும் பிரச்சினைகளை நீக்குவதற்காக. அறிக்கை சக்தி உடலுக்கு வரும் அனைத்து கார்டுகளையும் நீக்கும். மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத கேன்சர், மன அழுத்தம், விவரிக்க முடியாத வலிகள், மற்றும் நோய்கள்  வருவதற்கு இத்தகைய கார்டுகளே காரணம்.
பிராணா சிகிச்சை கோல் வேறு மருத்துவம் அல்லது மாற்று மருத்துவத்திற்க்கு மாற்றாகுமா?
இல்லை, இது அனைத்து விதமான சிகிச்சையுடனும் சேர்ந்து செய்யக்கூடியது. சூட்சும சக்தி உடலை குண்மாக்குவதின் மூலம் அனைத்து சிகிச்சையும் சிறப்பாக செயல்பட்டு பரு உடலை வேகமாக குணமடைய செய்யும்.
பிராணா சிகிச்சை கோலினால் நீருக்கு சக்தியூட்ட முடியுமா?
தண்ணீர் அபரிதமான பிராணாவை கொண்டுள்ளது மற்றும் பிராணா சிகிச்சை கோலினால் நீருக்கும் சக்தியூட்டலாம்.  அந்த நீரை குடிப்பதின் மூலம் உடல் புதுப்பிக்கப்படும்.
வெண் மந்திரம், செய்வினை அல்லது எதிர்மறையான மாய வித்தைகளை பிராணா வயலெட் சிகிச்சையால் நீக்க முடியுமா?
ஆம். எளிதாக நீக்கலாம். அம்மாதிரி விஷயத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
மந்திரங்கள் மற்றும் சாபத்தை நீக்க முடியுமா?
ஆம். எளிதாக நீக்கலாம். எங்களை தொடர்பு கொண்டால் எவ்வாறு நீக்கலாம் என விவரிப்போம்.
வீடு, அலுவலகம் மற்றும் மாளிகைகளை எதிர்மறை சக்தியை நீக்கி சுத்தப் படுத்த முடியுமா?
ஆம், எளிதாக குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி 4 முதல் 5 நிமிடத்தில் நீக்கலாம்.
பிராணா வயலெட் சிகிச்சை முறையை நான் பிறருக்கு கற்று தரலாமா?
நீங்கள் தன்னம்பிக்கையுடன் சிகிச்சை அளிக்க ஆரம்பித்த உடன் பிறருக்கும் கற்றுத் தரலாம். இங்கு கற்று தரப்படும் அனைத்தையும் யாருக்கு வேண்டுமென்றாலும் நீங்கள் கற்றுத் தரலாம். நாங்கள் இந்த அறிவை அனைவரும் பெற வேண்டும் என விரும்புகிறோம்.
பிராணா சிகிச்சை கோலினால் சிகிச்சை அளிக்கும் போது நான் பணம் பெறலாமா?
பிராணா சிகிச்சை கோலினால் சிகிச்சை அளிக்கும் போது நீங்கள் பணம் பெறுவதற்கு பதிலாக சிகிச்சையை மெச்சி அன்புடன் தரப்படும் எதையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் நிறைய நேரம் செலவழித்து சிகிச்சை அளித்தால், உங்கள் நேரத்திற்காக விலை பெறலாம். நோயுற்றவர் குணமடைந்த பின் பணம் பெறுவதே சிறந்தது மேலும் பெற்ற பணத்தில் ஒரு பகுதியை தானம் செய்வது மேலும் சிறப்பு.
மற்றவருக்கு பிராணா சிகிச்சை  அளிப்பதால் என்ன பலன்?
எளியவருக்கு அளிக்கும் சிகிச்சை இறைவனுக்கு தொண்டு செய்வதற்கு சமமாகும் அதனால் நீங்கள் பல மடங்கு வாழ்த்தை பெறுவீர்கள். நல்ல கர்மாவை ஏற்படுத்தி கொள்கிறீர்கள். நீங்கள் மற்றவருக்கு எதை தருகிறீர்களோ அது பல மடங்காக உங்களுக்கு திரும்ப வரும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிராணா வயலெட் சிகிச்சை மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படுவது எதற்காக?
நாங்கள் அதை இலவசமாக பெற்றதால் அனைவருக்கும் இலவசமாக தருகிறோம். இது இறைவனுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள விஷயம்.

பிரம்பனன் (Prambanan)

கண்டி பிரம்பனன்  என்பது இந்தோனேசியாவில் உள்ள மத்திய ஜாவாவில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்காக ஒரே மதிலினுள் கட்டப்பட்ட ஹிந்து கோவில்களின் தொகுப்பு கட்டிடங்கள் (complex) ஆகும். இது ஜாவாவின் பெரிய ஹிந்து கோவிலாகும். முதலில் மொத்தம் 24௦ கோவில்கள் பிரம்பனனில் இருந்தன.


பல கோவில்களுடன் கூடிய இந்த தொகுப்பு கட்டிடம் மூன்று பாகங்களை கொண்டுள்ளது. முதலில் வெளி பாகம், இரண்டாவது மத்திய பாகத்தில் நூற்றுக்கணக்கான சிறிய கோவில்கள் உள்ளன, மூன்றாவதும் மிகவும் புனிதமானதுமான உட்பாகத்தில் எட்டு பெரிய கோவில்களும், எட்டு சிறிய கோவில்களும் உள்ளன.
மத்திய பகுதி மற்றும் உள் பகுதிதான் மிகவும் புனிதமானது. அதில் எட்டு முக்கிய வழிபடும் இடங்கள் அல்லது கண்டிகள் உள்ளது. மூன்று கண்டிகள் மூன்று முக்கிய கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது.
சிவனின் ஆலயம் ஐந்து பகுதிகளுடன் உள்ளது.நடுவில் ஒரு பகுதியும், நான்கு திசைகளில் நான்கு பகுதிகளும் கொண்ட இது மிகவும் பெரியது. 47 மீட்டர் உயரமும், 34 மீட்டர் அகலமும் உடையது. மூன்று மீட்டர் உயர சிவன் சிலை கொண்ட கிழக்கு பகுதி, மத்திய பகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளது. மற்ற மூன்று பகுதிகளிலும் துர்க்கை, ரிஷி அகஸ்தியர் மற்றும் கணேசன் ஆகியோரின் சிலை உள்ளது. பிரம்மா கோவிலில் பிரம்மாவின் சிலையும், விஷ்ணு கோவிலில் விஷ்ணுவின் சிலையும் உள்ளது. இவ்விரண்டு கோவிலும் 33 மீட்டர் உயரமும், 2௦ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
அனைத்து கோவில்களும் மஹாமேரு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்து மக்கள் தியானம் செய்யலாம்.

போரோபுதூர்(Borobudur)

போரோபுதூர் ஒன்பதாம் நூற்றாண்டில் மஹாயான புத்தரின் ஞாபகச்சின்னமாக  இந்தோனேசியாவில் உள்ள மத்திய ஜாவாவில் கட்டப்பட்டது. இந்த புரதான சின்னத்தில் மொத்தம் ஆறு சதுர வடிவ மேடைகளும், மூன்று வட்ட வடிவ மேடைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக கட்டப்பட்டுள்ளது. அம்மேடைகள் 2672 துயர் போக்கும் சட்டங்கள் மற்றும் 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மேடைகளுக்கும் மேலே உள்ள மணி வடிவ நடு மண்டபத்தைச் சுற்றி 72 புத்தர் சிலைகள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் துளைகளுடன் கூடிய மணி வடிவ சிறிய ஸ்துபியினுள்ளே உட்கார்ந்த நிலையில் உள்ளது. உலகின் பெரிய புத்த நினைவு சின்னமான இது உலகின் முக்கிய புத்த சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இங்கு வரும் ஒருவர் முதலில் கிழே உள்ள அடித்தள மேடையில் பயணத்தை துவங்க வேண்டும். பின்பு மேடைகளைச் சுற்றி அமைந்துள்ள பாதையின் வழியாக மேலேயுள்ள மேடைகளுக்கு ஏறிச் செல்ல வேண்டும். படிப்படியாக ஏறி உச்சியில் உள்ள ஸ்தூபியை (மணி வடிவ மண்டபம்) அடையலாம். இது புத்தர்களின் அண்டவெளியியலில் குறிப்பிட்டுள்ள மூன்று நிலைகளை குறிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட கட்டிடமாகும்.
அம்மூன்று நிலைகள் :
காமதாது (ஆசைகளின் உலகம்)
ரூபதாது (வடிவங்களின் உலகம்) மற்றும்
அரூபதாது (அருவங்களின் உலகம்)
படிகளின் வழியாக மேலே ஏறும் பொது, கைப்பிடி கொண்ட நடை பாதையில் அமைக்கப்பட்ட 1460 துயர் போக்கும் சட்டங்களில் உள்ள கதைகளை பார்த்தவாறே  மேலே செல்லலாம். உலகிலேயே போரோபுதூரில் மட்டுமே  புத்தரின் முழுமையானதும் பெரியதாகவும் உள்ள  நிவாரணக் கதைகளை  இருக்கிறது.
504 புத்தர் சிலைகளில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டவை தலையில்லாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. 43 சிலைகளை காணவில்லை.
போரோபுதூர் எதற்க்காக யாரால் கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகளோ பதிவுகளோ இல்லை. மறைக்கப்பட்ட தரை தளத்தில் உள்ள செதுக்கப்பட்ட  சட்டங்களை ஒப்பிட்டு பார்த்தும், கல்வெட்டினை பார்த்தும் இது எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டியதாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கட்டி முடிக்க 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றும் கட்டி முடித்த ஆண்டு தோராயமாக 825 AD என்று கண்டறிந்துள்ளனர்.
போரோபுதூர் பல நூற்றாண்டுகளாக எரிமலை சாம்பலில் புதையுண்டும், அடர்ந்த காடுகளில் மறைந்தும் இருந்தது. இது வனாந்திரமாக மாற என்ன காரணம் எனபது இன்னும் மர்மமாகவே  இருக்கிறது.
சதுரமாக உள்ள அஸ்திவார மேடையானது தோராயமாக ஒவ்வொரு பக்கமும் 118 மீட்டர் (387 அடி) நீளம் உள்ளது. மொத்தம் உள்ள ஒன்பது மேடைகளில் கிழே உள்ள ஆறும் சதுரமாகவும், மேலே உள்ள மூன்றும் வட்ட வடிவிலும் உள்ளது. அனைத்திற்கும் மேலே உள்ள மேடையில் ஒரு பெரிய மணி வடிவ மண்டபமும் (ஸ்தூபி) அவற்றைச் சுற்றி 72  சிறிய ஸ்தூபிகளும் உள்ளன.  ஒவ்வொன்றும் மணி வடிவத்திலும் நூண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த துளைகளுடன் உள்ளது. ஒவ்வொன்றிலும் உட்கார்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது.
இந்த புராதன சின்னத்தின் மூன்று பகுதியும் புத்த அண்டவெளி இயலின் உள்ள காமதாது, ரூபதாது மற்றும் அரூபதாது ஆகிய மூன்று இராஜியங்களைக் குறிக்கிறது.
அடியில் உள்ள அஸ்திவார சதுர மேடை காமதாது உலகின் அடையாளம். அடுத்துள்ள ஐந்து சதுர மேடைகள் ரூபதாது உலகின் அடையாளம். மேலுள்ள மூன்று வட்ட மேடைகள் அரூபதாது உலகை குறிக்கிறது.
சாதாரண உணர்ச்சிவயப்பட்ட உயிர்கள் கீழ் உலகமான ஆசைகளின் இராஜியத்தில் வாழ்கின்றன.
தொடர்ந்த இருப்பிற்கான ஆசைகளை எரித்தவர்கள், வடிவங்களின் இராஜியத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் வடிவங்களை பார்த்தாலும் அவற்றால் கவரப்படுவதில்லை.
இறுதியாக முழு புத்தர்கள் வடிவங்களைத் தாண்டி உண்மையை அதன் தூய்மையான நிலையில் அனுபவித்து, முற்றிலும் நிர்வாண நிலை அல்லது இருப்பில்லாத சுயத்தை அடைந்து விடுகிறார்கள். அவர்கள் மேலே உள்ள அரூபதாது இராஜியத்தை அடைகிறார்கள்.
    
 கர்ம சட்டதிட்டம் (கர்மவிபங்கா)
1885 ஆம் ஆண்டு அஸ்திவார மேடையின் அடியில் மறைக்கப்பட்ட ஒரு கட்டிடப் பகுதியை தற்செயலாக கண்டுபிடித்தனர். அதில் மொத்தம் 160 சட்டங்களில் காமதாது இராஜியத்தை பற்றிய கதை காட்சிகள் செதுக்கப்பட்டிருந்தன.
160 சட்டமும் தொடர் கதையாக இல்லாமல், ஒவ்வொரு சட்டமும் ஒரு முழுமையான “செயல் மற்றும் வினைப்பயனை” விளக்கும் வகையில் உள்ளது. கேடு விளைவிக்கும் நடத்தைகளான புரங்கூறுதல் முதல் கொலை வரை செயல்களும் அவற்றின் வினைப்பயனாக கிடைக்கும் தண்டனைகளும் செதுக்கப்பட்டுள்ளது. நல்ல விளைவை  அளிக்கும் மேம்பட்ட நடத்தைகளான தான தருமம் செய்வது முதல் ஆலயத்திற்கு செல்லும் புனித பயணம் வரை நற்செயல்களும் அவற்றின் வினைபையனாக தகுந்த பரிசுகளும்  செதுக்கப்பட்டுள்ளது.
முதல் பார்வைக்கு, அனைத்து புத்தர் சிலைகளும் ஒரே மாதிரி காட்சி அளித்தாலும் அவர்களின் கை விரல்களின் முத்திரைகள் மற்றும் கைகளை வைத்திருக்கும் அமைப்பிலும் சூட்சுமமான வித்தியாசம் உள்ளது. மொத்தம் ஐந்து (வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் ஆகாயம்) திசைகளுக்கு ஐந்து வகை முத்திரைகள் உள்ளது. ஐந்து குழுக்களாக புத்தர் சிலைகளும் ஐந்து வித முத்திரைகளை பிடித்த வண்ணம் இருக்கிறார்கள்.
அக்சோபயா புத்தர் – பூமிஸ்பர்ச முத்திரை – பூமியை சாட்சிக்கு அழைத்தல்.
ரத்னசம்பவா புத்தர் – வர முத்திரை – இரக்கம், தானம் செய்தல்.
அமிதபா புத்தர் – தியான முத்திரை – கூரிய சிந்தனை, தியானம்.
அமோகசித்தி புத்தர் – அபய முத்திரை – தைரியம், காத்தல்.
வைரோச்சனா புத்தர் – வித்தார்க் முத்திரை – விவேகம், நல்லொழுக்கம்.
வைரோச்சனா புத்தர் – தர்மசக்கர முத்திரை – தர்ம சக்கரத்தை சுழற்றி தர்மத்தை நிலை நாட்டுதல்.

பிராணா சிகிச்சை கோல்(Prana Healing Wand)

பிராணா சிகிச்சை கோல்

இது பிராண சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது தொடர்ந்து பிராண சக்தியை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பிரபஞ்ச சின்னத்தில் இருந்து வெளியேறும் பிராண சக்தியானது உடலை சரி செய்து, புத்துணர்ச்சி அளித்து, குணமடைய செய்கிறது.
காபி கலக்கும் குச்சியை போல காணப்படும் பிராணா சிகிச்சைக் கோலானது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது ஆகும். எளிதாக உபயோகிக்கத் தக்க வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள கோலானது எளிமையான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு இருப்பதால், அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முடிகிறது. எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல முடிகிறது.
பிராணா சிகிச்சை கோல் இரண்டு முனைகள் கொண்டுள்ளது.
ஒரு முனை சதுரமாக போரோபுதூர் சின்னம் கொண்டது. இது பிராணாவை வெளியிட்டு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
மற்றொரு முனை சிறிய பந்து போன்ற நுனி கொண்டது. சக்தி உடல், சக்கரம் ஆகியவற்றை உணர  பயன்படுகிறது.
பிராணா சிகிச்சை கோலின் பயன்பாடு
ஆராவின் பகுதிகளான
சக்தி உடல்(எனர்ஜி உடல்)
உணர்வு உடல்(ஆஸ்டரல்/ எமோஷனல் உடல்)
மன உடல் (மெண்டல் உடல்)
ஆகியவற்றை உணர்வதற்கு கோல் பயன்படுகிறது. மேலும் பலவற்றை கோலை கொண்டு கண்டறியலாம். அவையாவன,
ஆராவில் உள்ள எதிர்மறை சக்திகள்
ஆராவில் உள்ள எதிர்மறை உணர்ச்சிகள்
சக்கரங்களின் சக்தி ஓட்டத்தில் ஏற்படும் தடைகள் அல்லது சக்தி இழந்த சக்கரங்கள்.
வழக்கமான அளவை விட மிகவும் பெரியதாகிவிட்ட அல்லது மிகவும் சிறியதாகி விட்ட சக்கரங்கள்.
வலியுள்ள / நோயுற்ற இடத்தின் சக்தி அளவு.
கோலினால் செய்யப்பட்டும் நான்கு கட்ட சிகிச்சை முறை
ஆராவைத் தூய்மைப்படுத்துதல்
இட-பிங்கல நாடிகளை சமன் செய்தல்
சக்தி தடைகளை கண்டறிந்து நீக்குதல் மற்றும் சக்கரங்களை சீராக்குதல்.
தேவையான (நோயுற்ற / வலியுள்ள) இடத்தில் சிகிச்சை அளித்தல்.
கோலின் பராமரிப்பு
சுத்தப்படுத்த தேவையில்லை.
ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.
ப்ரோகிராம் செய்ய தேவையில்லை.
மந்திரம் சொல்ல தேவையில்லை.
தியானம் செய்யத் தேவையில்லை.
பிரபஞ்ச சக்தியுடன் இணையத் தேவையில்லை.
தீட்சை பெறத் தேவையில்லை.
கோலிற்கான விதிகள்
விதிகள் எதுவும் இல்லை.
எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்.
எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தடைகள்(Blocks)

சக்தி தொடர்பானது ஒருவரின் வாழ்வில் பல நிலைகளில் தடைகளை உண்டாக்கலாம்.
உடல் நலன் முன்னேற்றத்தில் தடை
திருமணத் தடை
நிறைவான மண வாழ்க்கை அமைவதில் தடை.
குழந்தை பேறு பெறுவதில் தடை.
வாழ்க்கை துணைவரின், குடும்பத்தினரின் உறவில் தடை.
வேலை, வாழ்க்கை, வாழ்க்கை முன்னேற்றத்தில் தடை
வியாபாரத்தில் தடை
வெற்றி பெறுவதில் தடை.
செல்வவளம் பெறுவதில் தடை
படிப்பதற்கு தடை
சொத்துக்களை வாங்க, விற்க, வாடகை விட தடை
ஆன்மிக முன்னேற்றம் பெறுவதில் மற்றும் கடவுளின் தொடர்பு ஆகியவற்றில் தடை (குருமார்களால் வருவது)

சில நேரங்களில் சக்தி தொடர்பு ஏதும் இல்லாமலேயே, நமது ஆராவில் தடைகள் காணப்படும். அத்தடைகள் நமது சுயமான எதிர்மறை எண்ணங்களால் வருவது. அது ‘நாமே நமக்கு ஏற்படுத்தும் தடை ஆகும். சில நேரங்களில் பிறரின் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மனோபாவங்கள் கூட இத்தடைகள் ஏற்பட காரணமாகும்.  தெரிந்தோ தெரியாமலோ கூட ஒருவர் பிறருக்கு தடை ஏற்படுத்த முடியும். அவரின் வார்த்தை மற்றும் எண்ணங்கள் பிறரை பாதிக்கும் என்று அறியாமலேயே அவர் தடைகளை உண்டாக்கலாம்.

உதாரணம் 1: திருமணமான பிற பெண்களை வரதட்சணை கேட்டு கணவனின் வீட்டார் துன்பப்படுத்த படுவதை அறிந்த ஒரு பெண் திருமணம் செய்ய பயந்து தனக்கு தானே ஒரு திருமண தடையை மனதில் உண்டாக்கலாம்.

உதாரணம் 2: ஒருவர் தனது வேலைக்கு தேவையான அறிவு மற்றும் தகுதி கொண்டிருப்பதில் அவநம்பிக்கை கொண்டு, மனதளவில் வேலை கிடைப்பதில் தடையை தனக்கு தானே உண்டாக்கலாம்.

உதாரணம் 3: கணவர் பதவி உயர்வு கிடைத்து வேறு ஊருக்கு செல்ல நேரிட்டால் தான் தனியாக இருக்க நேரிடும் என்று பயப்படும் மனைவி கணவனின் பதவி உயர்வுக்கு தன்னை அறியாமலேயே தடையை ஏற்படுத்துகிறார்.

சக்தி தொடர்புகள் / கார்டுகள்(Cords)

இரண்டு அல்லது அதிக நபர்களுக்கு இடையே வரும் சக்தி தொடர்புகளே கார்டுகள் ஆகும்.  இவை ஒருவர் பிறரிடம் அல்லது பிறரை பற்றி கொண்டுள்ள வலிமையான எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகளாகும். நல்ல விதமாகவோ அல்லது கெடுதலாகவோ இந்த சக்தி தொடர்புகள் இருக்கலாம், ஆனால் பொதுவாக எதிர்மறை எண்ணப் பதிவுகளே சக்தி தொடர்பாக/ கார்டாக உருவாகிறது.

இந்த சக்தி தொடர்பானது சிறிது நேரம் மட்டும் கூட இருக்கலாம், அவர்கள் உங்களை பற்றி நினைக்கும் சிறிது நேரம் மட்டுமே இருக்கும். எப்போதும் தொடர்ந்து எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருந்தால், சக்தி தொடர்பும் நிலையாக இருக்கும். விவாகரத்து பெற்றவர்களிடையே சக்தி தொடர்பானது எதிர்மறையாக தொடர்ந்து இருக்க வாய்ப்பு அதிகம்.

உதாரணமாக, அழகிய பெண்ணை கடைத் தெருவில் பார்க்கும் ஆண்கள் அனுப்பும் காம எண்ணங்களின் சக்தி சிறிது நேரம் மட்டுமே இருக்கும். ஏனென்றால் சிறிது நேரம் சென்று  வீட்டிற்கு சென்ற பின் அனைவரும் அந்த பெண்ணை மறந்தே பொய் விடுவர். மற்றொரு உதாரணம், வார இறுதியில் வெளியே போக திட்டம் போடும் மனைவி அவசர வேலையாக அலுவலகம் செல்லும் கணவனுக்கும் மற்றும் அவனது முதலாளிக்கும் கூட கார்டுகளை அனுப்பலாம். ஆனால் சிறிது நேரத்தில் போய் விடும்.

சில நேரத்தில் கார்டுகள் ஆழ்மனதில் பதிவான நினைவுகள் மூலமாக எழும் எண்ணங்களால் உருவாகும். மேலும் அது அந்த நபருக்கே தெரியாமல் இருக்கலாம், இந்த எண்ணத்தின் சக்தியானது கார்டாக வெளியேறி மற்றொரு நபருடன் எதிர்மறை சக்தி தொடர்பை உண்டாக்கும். உதாரணமாக, 65 வயது மனிதரின் இருதய சக்கரத்திற்கு வரும் சக்தி தொடர்பானது அவர் இருபது வயதில் விரும்பி, திருமணம் செய்ய முடியாமல் மறந்து போன பெண்ணிடமிருந்து வரலாம். பல வருடங்களாக அந்த பெண் ஆழ்மனதில் அந்த காயத்தை வைத்திருந்து அவருக்கு சக்தி தொடர்பை (கார்டை) அனுப்பி கொண்டே இருப்பார்.  அந்த மனிதரின் இருதயத்தை அது தொடர்ந்து பாதிக்கும்.

சக்தி தொடர்பானது அறிந்தோ அல்லது அறியாமலோ, தெரிந்த நபரிடமிருந்தோ அல்லது அறிமுகமில்லாத நபரிடமிருந்தோ, ஏன் சில நேரங்களில் இறந்து போன மனிதரின் ஆன்மாவிடம் இருந்தோ கூட சக்தி தொடர்பு உருவாகும்.  உதாரணமாக, இறந்து போன உங்கள் நண்பருடன் தீராத பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், இறந்த பின்பும் அவரது ஆன்மாவிடமிருந்து சக்தி தொடர்பு வரலாம்.

சக்தி தொடர்பின் (கார்டுகளின்) வகைகள்:

பொறாமை, ஆற்றாமை, கோபம், மனக்காயம், ஏமாற்றம், பழிவாங்கும் எண்ணம், காமம் போன்றவை, செய்வினை மற்றும் குருவின் கார்டுகள்.

சக்தி தொடர்பு கீழ்காணும் நபர்களிடம் இருந்து வரலாம்:
குடும்ப உறுப்பினர்கள், சொந்தங்கள்
கணவனின் குடும்பத்தினர்
வாழ்க்கை துணைவர்
மகன் மற்றும் மகள்கள்
அலுவலக சக ஊழியர்கள்
வகுப்பு தோழர்கள்/ சக மாணவர்கள்
அண்டைவீட்டார்
வேலையாட்கள்
நோயாளிகள் சிகிச்சை அளிப்பவருக்கு
வேலை/ தொழில் போட்டியாளர்கள்
முன்னாள் கணவன்/ காதலன், முன்னாள் மனைவி/ காதலி (மிகவும் எதிர்மறையாக இருக்கும் பல நேரங்களில்)
நாம் திருமணம் செய்ய மறுத்த அல்லது நிராகரித்த ஆண்/ பெண் (இந்தியாவில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இவை உருவாகும்)
ஆன்மிக குருக்கள்/ மையங்கள்/ சிகிச்சை அளிப்பவர்கள்
மந்திரவாதிகள்
மத சார்பான இடங்கள், போன்றவை.

கீழ் காணும் இடத்தில் சக்தி தொடர்பு பாதிக்கும்

ஒன்று அல்லது அதிகமான அல்லது அனைத்து பெரிய சக்கரங்கள்
ஒன்று அல்லது அதிகமான உடல் உறுப்புகள்
பரு உடலின் ஏதாவது ஒரு பாகம்
சக்தி (எனர்ஜி)/ எண்ண(எமோஷனல்) / மன (மெண்டல்) உடல்

சக்தி தொடர்புகள் பெரும்பாலும் சோலார் சக்கரத்திற்கு வரும்.  ஏனென்றால் அது பிராணா உடலில் நுழையும் மண்ணீரல் சக்கரத்திற்கு அருகில் இருக்கிறது. ஆனால், பிற சக்கரங்களிலும் வரும்.

நமது உடலின் சக்தி குறைந்த பலவீனமான இடங்களுக்கே சக்தி தொடர்பானது வரும்.  உதாரணமாக, உங்கள் கல்லீரல் ஏற்கனவே பாதிக்க பட்டிருந்தால், சக்தி தொடர்பு எளிதாக கல்லீரலை பாதிக்கும்.

சக்தி தொடர்பினால் வரும் பாதிப்புகள்

உடல் பாதிப்பு/ வலி
உணர்வுரீதியான தொந்தரவுகள்
மன பாதிப்புகள்
பலவிதமான தடைகள்

சக்தி தொடர்பு உங்களிடமிருந்து வெளியில் சென்றாலோ, அல்லது வெளியில் இருந்து உங்களுக்கு வந்தாலோ, நீங்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவீர்கள்.

நீங்கள் கார்டை வெளியே அனுப்பும் போது, உங்கள் பிராண சக்தியானது சக்தி தொடர்பாக வெளியேறுகிறது. அதனால், பிராண சக்தியானது குறைந்து, சக்கரங்களையும் அதற்கு தொடர்புடைய உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது.

சக்தி தொடர்பானது உங்களது எதிர்மறை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருப்பதால், உயிர் சக்தியானது தேவையில்லாமல் மனதில் எதிர்மறை எண்ணப் பதிவுகளை உண்டாக்க உபயோகப்படுத்தப்பட்டு உங்களை கிளர்ச்சியுற செய்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. மற்றும் உடல் வலியையும் உண்டாக்கலாம்.

சக்தி தொடர்பானது சக்கரத்திற்கு வரும்போது, அவ்விடத்தின் சக்தியை பாதித்து, நாடிகளில் பிராண ஓட்டத்தை தடை செய்து சிறிது சிறிதாக முழு உடலையும் பாதிக்கிறது.  கோபமான சக்தி தொடர்பு உங்களை பாதிக்கும் போது, அது உங்களிடம் கோபத்தை ஏற்படுத்துகிறது, காம உணர்வு கார்டு வரும்போது உங்களுக்கும் காம எண்ணங்கள் உருவாகிறது. பிற உணர்ச்சிகளான சோகம், பதற்றம், கவலை போன்றவையும் அவ்வாறே.  நீங்கள் அதே ரீதியான உணர்வுகளை உங்களை அறியாமல் அனுபவிப்பீர்கள். அப்படிப்பட்ட எண்ணங்களும், உணர்வுகளும் ஏன் மனதை ஆக்கிரமிப்பு செய்கின்றன என்று புரியாமல் குழம்பித் தவிப்பார்கள். சக்தி தொடர்பானது நீண்ட காலமாக ஒரே சக்கரத்திலோ / உறுப்பிலோ இருந்தால் தீவிரமான உடல் பாதிப்புகளை உண்டாக்கும்.

உதாரணம் 1: இருதய சக்கரத்தில் உள்ள நீண்ட கால கார்டானது அடைப்பை ஏற்படுத்தி இருதயம் சரி வர இயங்காமல் தடுக்கும்.

உதாரணம் 2: பாலுறுப்பு (செக்ஸ்) சக்கரம் / கருப்பையில் ஏற்படும் சக்தி தொடர்பானது கருப்பை கான்சரை உண்டாக்கலாம் அல்லது குழந்தை பேறு பெறுவதில் தடையை ஏற்படுத்தலாம்.

உதாரணம் 3: கணையத்திற்கு வரும் சக்தி தொடர்பானது ஒருவரை சர்க்கரை நோயாளி ஆக்கி  அதிலிருந்து மீள முடியாமல் செய்யும்.

சக்தி தொடர்பை பூமி, சூரியன் போன்றவற்றில் வெட்டி வீச முடியாது. ஏனென்றால் சக்தி தொடர்பானது உங்களை நோக்கி பிறரால் அனுப்பப்பட்ட எதிர்மறை எண்ணங்களாகும். பிறரது  உங்களை பற்றிய எண்ணங்கள் நல்லவிதமாக மாறும் வரை அவர்கள் சக்தி தொடர்பை தொடர்ந்து அனுப்பி கொண்டே இருப்பார்கள்.

நீங்கள் நேர்மறையான நல்ல எண்ணத்துடன் இருந்து, மற்றவரை மன்னிக்கும் மனோபாவத்துடன் இருந்து, அவர்களை வாழ்த்தினால் பிறரிடமிருந்து வரும் சக்தி தொடர்பை நிறுத்தலாம். அது உங்களை பாதிக்காது. ஆகவே நீங்கள் முதலில் மாற வேண்டும்.

மற்றவரை மன்னித்தும், மற்றவரிடம் மன்னிப்பு கேட்டும் நீங்கள் உங்களை காத்து கொள்ளலாம். முக்கியமாக, கடவுளுடனான உங்கள் தொடர்பை  வலுவுள்ளதாக வைத்து கொண்டால், கடவுளின் பாதுகாப்பு தானாகவே உங்களுக்கு கிடைத்து விடும்.

அமானுஷ்ய சக்திகள்(Occult Practices)

அமானுஷ்ய சக்திகள் (ஆன்மாக்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம்)

சில பொருட்கள் மற்றும் சின்னங்கள் உபயோகித்து எதிர்மறை சக்தியால் ஆன சில சடங்குகளைச் செய்வதே இது. சில பொருட்களும் சின்னங்களும் எதிர்மறை சக்திகளை கவர்ந்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை அல்லது எதிர்மறை சக்தியுடன் தொடர்பை வைத்திருக்கும் தன்மை கொண்டவை.
சில உதாரணங்கள்
ஒருவரை காயப்படுத்தும் எதிர்மறை நோக்கத்துடன் அவரது புகைப்படத்தை எரித்தல்.
சின்னங்களை எதிர்மறை சக்தியை தூண்டும் ஓர் வடிவமாக வைத்து, பிறரை துன்புறச் செய்தல்.
மணிகள், கயிறுகள் ஆகியவற்றை கோர்த்து பாதுகாப்பதற்காக சில பொருட்களை வீட்டில் வைத்திருந்து வழிபடுதல்.

சாபங்கள் மற்றும் மந்திர உச்சாடனம்

இது ஒருவரை காயப்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகள் மூலம் எதிர்மறை சக்திகளை உருவாக்குதல். உங்களால் யாராவது மனதளவில் காயப்பட்டிருந்தால், அந்த மனிதர் உங்களுக்கு கடுமையாக சாபம் அளிக்கலாம்.

சாபங்கள் நாடுகளுக்கு, கிராமங்களுக்கு, குடும்பங்களுக்கு மற்றும் பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து வருவதை பார்க்கலாம்.
உதாரணம் 1: வலிமை வாய்ந்த நபர், வலிமையற்ற நபரை  காயப்படுத்தினால், காயப்பட்டவர் நிறைய எதிர்மறை எண்ணங்களை சாபமாக அனுப்பலாம்.
உதாரணம் 2: மாமியார்/ கணவர் ஆகியோர் பெண்ணை துன்புறுத்தினால் அப்பெண்ணின் சாபம் அவர்களுக்கு வரலாம்.
உதாரணம் 3: சில நேரங்களில், இந்த இடம் அல்லது பகுதி சாபத்திற்கு ஆளாகி உள்ளது என்கிறோம், ஏனென்றால் பல வருடத்திற்கு முன் செய்ததாக இருக்கும். அவ்விடம் பல வருடத்திற்கு முன் போரில் ஜெயிக்கப்பட்டு, பல அப்பாவி  மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டு  கொலை செய்யப்பட்டு இருப்பர்.

குறிப்பு:
எங்களது பயிற்சி வகுப்பில் இதை போன்ற பல வித எதிர்மறை எண்ணங்களை பார்க்கிறோம். பலவற்றை விவரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. எங்கள் வலைப்பக்கம்(website) மற்றும் முகநூலில் (facebook) உள்ள பிறரின் அனுபவங்களை படிப்பது இதை பற்றி அறிய ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.
எங்களது பயிற்சி வகுப்பில் இப்படி பட்ட எதிர்மறை சக்திகள் ஒருவரிடம் இருப்பதை எப்படி கண்டறிவது என கற்றுத் தருகிறோம்.
இப்படி பட்ட எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி என்று கற்றுத் தருகிறோம்.
எங்கள் வகுப்பில் கலந்து கொண்டு செயல் முறைகளை பின்பற்றினால் அனைத்து வித எதிர்மறை சக்திகளில் இருந்தும் விடுதலை பெறலாம்.

கடவுளின் தொடர்பும், குருவின் தொடர்பும்


ஒவ்வொரு ஆன்மாவும் படைத்த சகதியுடன் தெய்வீக சக்தி தொடர்பு (டிவைன் கார்டு) மூலமாக இணைக்கப்பட்டுள்ளனர். தெய்வீக சக்தி தொடர்பானது, ஒருவரின் சகஸ்ரார சக்கரத்தில் இருந்து காரண உடலிற்கும் (காசல் உடல்) , காரண உடலில் இருந்து நம்மை படைத்த இறை சக்தியிடமும் இணைக்கப்பட்டுள்ளது.

சகஸ்ரார சக்கரத்தில் இருக்கும் தெய்வீக சக்தி தொடர்பு தான் கடவுளுடனான உங்களது தொடர்பை நிலைநாட்டுகிறது. கடவுளுடனான உங்கள் தொடர்பு வலிமையாகும் போது, தெய்வீக சக்தி தொடர்பின் வலிமையும் அதிகரிக்கும்.

மற்றொரு சக்தி தொடர்பும் சகஸ்ரார சக்கரத்திற்கு வருகிறது. அது கடவுள் ஒருவருக்கு அனுப்பும் தொடர்பு ஆகும். அதன் பெயர் ‘அந்தக்கரணம்’ . கடவுள் ஒருவரை சில விஷயங்களுக்காக தனது கருவியாக்க விரும்பினால், அவர் அந்தக்கரணம் மூலமாக இயங்குவார். உதாரணமாக கடவுள் மனித குலத்திற்கு நன்மை செய்யவோ, அறிவியலில் புதிய உத்தியை தரவோ, புதிய சக்தியை கொண்டு வரவோ அல்லது அவர் மட்டுமே அறிந்த காரணத்திற்காகவோ நம்மை கருவியாக பயன்படுத்துகிறார்.

பிராணா சிகிச்சை கோலின் மூலமாக நீங்கள் தெய்வீக சக்தி தொடர்பு மற்றும் அந்தகரண சக்தி தொடர்பின் அளவை தெரிந்து கொள்ளலாம்.

குருமார்களிடம் இருந்து வரும் சக்தி தொடர்பானது இறைவனின் தொடர்பை பெரும்பாலும் நீக்கி விடுகிறது. கடவுளின் தொடர்பு படிப்படியாக குறைந்து மிகவும் வலுவற்ற தொடர்பு மட்டுமே ஆன்மா மற்றும் படைப்பின் சக்திக்கிடையே இருக்கும். ஏனென்றால், உங்கள் விருப்பப்படி நீங்கள் உங்கள் குருவையே கடவுளாக தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.

அதனால் வொயிட் மேஜிக் உங்களது ஆன்மிக பாதை மற்றும் கடவுளின் தொடர்புக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.

வொயிட் மேஜிக் White Magic

வொயிட் மேஜிக் (குருமார்கள் அனுப்பும் எதிர்மறை சக்தி தொடர்பு

ஒரு மனிதரை குறிப்பிட்ட ஆன்மிக வழிக்கு கொண்டு வர செய்யும் ஒருவகை சக்தி தொடர்பே வொயிட் மேஜிக் எனப்படும். பிறச் சக்கரங்கள் அல்லாமல் சகஸ்ரார சக்கரம் மற்றும் ஆஜ்னா சக்கரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ சக்தி தொடர்பு ஏற்பட்டு இருந்தால், அது வொயிட் மேஜிக் என அறியலாம். அந்த சக்தி தொடர்பு உள்ளே வருவதாகவோ அல்லது வெளியே செல்வதாகவோ இருக்கலாம்.  அதாவது, சில நேரம் சிஷ்யர்கள் குருவை நோக்கி சக்தி தொடர்பை அனுப்புவார்கள் (வெளியே செல்லும் கார்டு), குருமார்களும் சிஷ்யர்களை நோக்கி சக்தி தொடர்பை அனுப்புவார்கள் (உள்ளே வரும் கார்டு). பல குருமார்கள் சிஷ்யர்களை தங்கள் ஆன்மிக வழிக்கு கொண்டு வர சிறப்பு வழிபாடு செய்வார்கள். இரண்டு வகையான வொயிட் மேஜிக் உள்ளது.
உயிருள்ள குருவின் மூலம் ஏற்படும் சக்தி தொடர்பு
உயிரற்ற குருவின் மூலம் (குருவானவர் ஆன்ம வடிவில் இருப்பார்) ஏற்படும் சக்தி தொடர்பு

உயிருள்ள குருவின் மூலம் ஏற்படும் சக்தி தொடர்பு

இது கடவுள் பெயரைச் சொல்லி தனக்கென்று புகழை பெற விரும்பும் சிலரிடம் இருந்து வரும் சக்தி தொடர்பே ஆகும். அப்படிபட்டவர்கள், தன்னைப் பின்பற்றுபவர்களை தன் பெயரில் மந்திரங்கள் சொல்ல சொல்வார்கள். தன் புகைப்படத்தை வெளியிட்டு, விளம்பரப்படுத்தி கூட்டம் சேர்த்து சீடர்களை உருவாக்குவார்கள். அப்படிபட்ட குருமார்கள் சீடர்களின் ஆஜ்னா சக்கரத்திற்கு சக்தி தொடர்பை செலுத்தி, ஆன்மிகரீதியாக  கட்டுப்படுத்தி  சீடர்களை தங்கள் வழிக்கு கொண்டு வருவார்கள்.

உதாரணம் 1: சிலர் ஆன்மிக விஷயங்களை தேடி இணையத்தில் உலாவும் போது, குறிப்பிட்ட வலைப்பதிவில் உள்ள குருவின் படத்தை பார்ப்பார்கள். உடனேயே அவர்களின் சகஸ்ரார சக்கரத்தில் சக்தி தொடர்பு ஏற்பட்டு விடும். இது உடனே அவர்களை அந்த ஆன்மிக குழுவில் சேரத் தூண்டும். ஏனென்றால், பெரும்பான்மையான நேரம் அவர்கள் குழுவில் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சி செய்த வண்ணம் இருப்பார்.
உதாரணம் 2: சிலர் ஆன்மிக உரை கேட்கப் போய் அப்படியே  அந்த குழுவில் இணைந்து விடுவார்கள். அவர்களால் எது சரி, எது தவறு என்று பகுத்தறிய முடியாது. அவர்கள் மத, குரு தலைவரை கடவுளை போல நினைத்து வீட்டில் அவரின் படத்தை வைத்து வணங்க ஆரம்பித்து விடுவர். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை அந்த தலைவர் அல்லது குழுவிற்கு  தருமாறு கேட்பார்கள்.
உதாரணம் 3: சில குழுவில் சேர்ந்தால் அவர்கள் மற்றவர் சமைக்கும் உணவை உண்ண அனுமதிக்க மாட்டார்கள். அந்த குழுவில் அவர்களின் தாய் இல்லாவிட்டால், அவரின் உணவையும் உண்ண மாட்டார்கள். ஏனென்றால், தாய் அந்த குழுவில் இல்லாததால் தூய்மையாக இல்லை என்று கூறுவார்கள். அவர்கள் தாங்களே சமைத்துண்ண வேண்டும் அல்லது குழுவின் மற்ற உறுப்பினர்கள் சமைக்கும் உணவை மட்டுமே உண்ண வேண்டும்.
உதாரணம் 4: பல குருமார்கள் தாங்களே திரும்ப மறுபிறப்பு எடுத்து வருவதாகக் கூறி, சீடர்களை காத்திருக்கச் சொல்வார்கள். பலர், பல ஆண்டுகளாக பிறக்கப்போகும் குருவுக்காக காத்திருக்கிறார்கள். சிலர் பல தலைமுறைகளாக குருவுக்கு காத்திருக்கின்றனர்.

உயிரற்ற குருவின் மூலம் (குருவானவர் ஆன்ம வடிவில் இருப்பார்)ஏற்படும் சக்தி தொடர்பு

இறந்து விட்ட சில குருமார்கள் ஆவியாக இருந்து தங்கள் சீடர்களுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்துவது இந்த வகை. அவர்கள் சில பல தலைமுறைக்கு சீடர்களுடனேயே இருப்பார்கள். தாங்கள் உருவாக்கிய அமைப்பை பாதுகாப்பதற்காக அவர்கள் இருப்பார்கள். சில குருமார்கள் தங்களது அடுத்த பிறவிக்காக காத்திருப்பார்கள், அந்நிலையில் கூட அவர்கள் சீடர்களுடன் தொடர்பு கொண்டிருப்பார்கள்.

உதாரணம் 1: எங்கள் சிகிச்சையின் போது பல முற்பிறவி குருமார்கள் ஒருவரின் சகஸ்ரார சக்கரத்தில் இணைந்திருப்பதைக் கண்டோம். அப்படியிருந்தால், அவரது ஆன்மா முற்பிறவியில் அந்த குருவின் அமைப்பில் இருந்து சேவையாற்றி கொண்டோ அல்லது தலைமைப் பொறுப்பிலோ இருந்திருக்கலாம். உச்சந்தலையில் வலி இருக்கும்.
உதாரணம் 2: ஆவி உலகில் உள்ள ஆன்மாக்களின் குழுவில் இருந்து நிறைய சக்தி தொடர்பு வருவதை காண்கிறோம். அப்படியிருந்தால், முற்பிறவிகளில் அந்த குழுவில் நீங்கள் இருந்திருக்கலாம். அந்த குழு அல்லது அமைப்பில் நீங்கள் தலைமைப் பொறுப்பிலோ அல்லது உயர் பொறுப்பிலோ முற்பிறவிகளில் இருந்திருக்கலாம்.