சக்கரங்கள் (Chakras)

ஞானதிருஷ்டி பெற்ற பழங்கால இந்திய யோகிகளால் கண்டுபிடிக்கப்பட்டதே சக்கரங்கள் ஆகும்.  சூட்சும உடலில் சுற்றிக் கொண்டிருக்கும் சக்தி சூழல்களான சக்கரங்கள், நாடிகளின் வலைபின்னல் வழியே உடலில் இணைக்கப்பட்டுள்ளதை அவர்கள் கண்டார்கள்.

பிராண சக்தியை நாடிகள் அல்லது சக்தி பாதைகள் வழியே உடலுக்கு அனுப்பும் சக்தி மையங்களாக சக்கரங்கள் செயல்படுகிறது. ஒருவரின் முன்பாகவோ, பின்னாலோ நின்று பார்க்கும் பொது, சக்கரங்கள் கடிகார சுழற்சியாக சுழலும்.

சக்கரங்களை பெரிய சக்கரங்கள், சிறிய சக்கரங்கள், மிகச் சிறிய சக்கரங்கள், சிறிய துணைச் சக்கரங்கள், உறுப்பிற்கான சக்கரங்கள், நாடிகளின் சக்கரங்கள் என்று பிரிக்கலாம். பிராணா வயலட் சிகிச்சையில் கூறப்படும் சக்கரங்கள் பற்றிய தகவல்கள் மற்றவற்றில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கலாம். நாங்கள் ஒவ்வொரு சக்கரத்தையும் காகிதம் மற்றும் நூல் கொண்டு செய்த எளிய ஊசலைக் கொண்டு கண்டுபிடித்து, சிகிச்சைக் கோலின் உதவியால் அதன் இடத்தை உறுதி செய்தோம்.

சக்கரங்களின் இருப்பிடம்: பல புத்தகத்தில் குறிப்பிட்ட படி சக்கரங்கள் முதுகு தண்டில் இல்லை என்றும் மாறாக அவை ஆராவில் உள்ள பல சூட்சும உடல்களில் உள்ளது என்பதை நாங்கள் கண்டோம். ஆராவில் முன்று அடுக்குகளிலும் அது அதற்கான சக்கரங்கள் உள்ளது. பெரிய சக்கரம் மன உடலிலும், மத்திய அளவு சக்கரம் உணர்வு உடலிலும், சிறிய சக்கரம் சக்தி உடலிலும் உள்ளது. சக்கரங்களின் சக்தி இறுதியாக முதுகுதண்டில் உள்ள புள்ளியில் சேருகிறது. உடலிற்கு முன், பின் உள்ள எல்லாச் சக்கரங்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக முன் பக்க சோலார் ப்ளக்சஸ் சக்கரமும், பின் பக்க சோலார் ப்ளக்சஸ் சக்கரமும் முதுகுதண்டில் உள்ள ஒரே புள்ளியில் இணைகிறது. இதை போன்றே மற்ற பிறச் சக்கரங்களும்.

சக்கரங்களின் வடிவம்: சக்கரங்கள் நேரே பார்ப்பதற்கு வட்ட வடிவில் தோன்றினாலும் உடலின் பக்கவாட்டில் இருந்து பார்க்கும் பொது, ஆராவின் பல அடுக்குகள் வழியாக முதுகுத்தண்டை நோக்கி செல்லும்  சக்கரம் புனல் போன்ற வடிவில் இருக்கிறது.

சக்கரங்களின் அளவு: சக்கரங்கள் பெரிய, சிறிய, மிகச் சிறிய என்ற அதன் வகைகேற்ற அளவில் இருக்கும். பொதுவாக, சக்கரத்தின் விட்டம் 2 முதல் 8 அங்குலம் இருக்கும். சில சமயம் அதைவிட பெரியதாகவும் இருக்கும். எல்ல பெரிய சக்கரங்களும் ஒரே அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் புனிதமான மனிதரின் சகஸ்ரார சக்கரம் அவரது பாலுணர்வு(செக்ஸ்) சக்கரத்தை விட பெரியதாக இருக்கும்.

சில முக்கியமான சக்கரங்கள்

உச்சந்தலை(சஹஸ்ரார) சக்கரம் மற்றும் நெற்றிபொட்டு(ஆஜ்னா) சக்கரம்  ஆகியவை உயர்ந்த ஆன்மிக சக்கரங்கள் ஆகும். சஹஸ்ரார சக்கரத்தின் வழியே நமது ஆன்மா படைப்பின் ஆற்றலான தெய்வீக ஒளியுடன் இறை  சக்தி தொடர்பு (டிவைன் கார்டு) வழியாக இணைகிறது. ஆன்மாவின் ஜன்னலான ஆஜ்னா சக்கரத்தில் இறைவனின் தொடர்பைத் தவிர வேறு எந்த சக்தி தொடர்பும் இந்த சக்கரத்திற்கு வராமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு தூய்மையான ஆன்மிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித சூழ்நிலையிலும் இந்த இரண்டு சக்கரங்களையும் வேறு யாரையும் தொட அனுமதிக்க கூடாது.  வேறு எதாவது சக்தி தொடர்பு இந்த சக்கரங்களுக்கு வந்தால், கடவுளின் சக்தி தொடர்பில் இருந்து நாம் தூண்டிக்கப்படுவோம். அதன் காரணமாக, நமது ஆன்மிக சக்தி மற்றும் இறை பாதுகாப்பை இழந்து விடுவோம்.

மண்ணீரல் (ஸ்ப்லீன்) சக்கரம் வாயிற்று பகுதியின் இடது புறத்தில் உள்ளது. பிராண சக்தி நமது உடலில் நுழையும் இடம் இது தான். பிராணா சிகிச்சை கோலினால் இந்த சக்கரத்திற்கு சக்தி அளித்தால், ஒருவரது ஆரா உடனடியாக பல மடங்கு பெரியதாகி, உபரி சக்தியானது பரு உடல் மற்றும் ஆராவில் பரவி சிகிச்சை விரைவாக நடக்க உதவி புரிகிறது. ஒருவர் மிகவும் சோர்வாகவோ, சக்தி இழந்தோ, சக்தி குறைந்தோ, நீண்ட கால நோயினால் வலுவிழந்தோ இருந்தால் இந்த சக்கரத்திற்கு சக்தி அளித்து உடனடியாக அவரது சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

கீழ்நிலை / புவிதொடும் சக்கரம் நமது இரு பாதங்களுக்கு இடையே சஹஸ்ரார மற்றும் மூலாதார சக்கரத்திற்கு நேர் கீழே உள்ளது. தரையுடன் நம்மை இணைக்கும் இந்த சக்கரத்தின் வழியாக உடலுக்கு தேவையற்ற அதீத சக்தி பூமிக்கு செலுத்தப்படும்.  இந்த சக்கரத்தில் தேக்கம் ஏற்பட்டால். உடலின் சாதரணமான குணமடையும் சக்தியை பாதிக்கிறது.

சக்கரங்களில் சிகிச்சை

சக்கரங்கள் பழுதடைந்தால் உறுப்புகளுக்கும் நாடிகளுக்கும் செல்லும் சக்தியானது தடைபட்டு உடல் நலக் கோளாறு ஏற்படும். ஆகையால் பிராணா வயலட் சிகிச்சை முறையில் கவனத்துடன் அனைத்து சக்கரங்களும் சக்தியுடனும் சரியான அளவில் செயல் பட வைக்கிறோம்.

சக்கரங்கள் அது இருக்கும் பகுதியில் உள்ள உள்ளுறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. ஓர் இடத்தில் உள்ள நோய் அல்லது அசௌகரியத்தை சரி செய்யும் முன்பாக அந்த இடத்தை சுற்றி உள்ள சக்கரங்களை குணப்படுத்த வேண்டும்.  உதாரணமாக, தைராய்டு பிரச்சினைக்கு, தைராய்டு சுரப்பியை சரி செய்யும் முன்பாக தொண்டைச் சக்கரத்தை சரி செய்ய வேண்டும். அதனால் தான், நாம் முதலில் அனைத்து உடலின் முன் மற்றும் பின்புற சக்கரங்களை சீராக்கி விட்டு பிறகு பாதிக்கப்பட்ட/ நோயுற்ற இடத்திற்கு சிகிச்சை செய்கிறோம்.