சக்தி தொடர்பானது ஒருவரின் வாழ்வில் பல நிலைகளில் தடைகளை உண்டாக்கலாம்.
உடல் நலன் முன்னேற்றத்தில் தடை
திருமணத் தடை
நிறைவான மண வாழ்க்கை அமைவதில் தடை.
குழந்தை பேறு பெறுவதில் தடை.
வாழ்க்கை துணைவரின், குடும்பத்தினரின் உறவில் தடை.
வேலை, வாழ்க்கை, வாழ்க்கை முன்னேற்றத்தில் தடை
வியாபாரத்தில் தடை
வெற்றி பெறுவதில் தடை.
செல்வவளம் பெறுவதில் தடை
படிப்பதற்கு தடை
சொத்துக்களை வாங்க, விற்க, வாடகை விட தடை
ஆன்மிக முன்னேற்றம் பெறுவதில் மற்றும் கடவுளின் தொடர்பு ஆகியவற்றில் தடை (குருமார்களால் வருவது)
சில நேரங்களில் சக்தி தொடர்பு ஏதும் இல்லாமலேயே, நமது ஆராவில் தடைகள் காணப்படும். அத்தடைகள் நமது சுயமான எதிர்மறை எண்ணங்களால் வருவது. அது ‘நாமே நமக்கு ஏற்படுத்தும் தடை ஆகும். சில நேரங்களில் பிறரின் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மனோபாவங்கள் கூட இத்தடைகள் ஏற்பட காரணமாகும். தெரிந்தோ தெரியாமலோ கூட ஒருவர் பிறருக்கு தடை ஏற்படுத்த முடியும். அவரின் வார்த்தை மற்றும் எண்ணங்கள் பிறரை பாதிக்கும் என்று அறியாமலேயே அவர் தடைகளை உண்டாக்கலாம்.
உதாரணம் 1: திருமணமான பிற பெண்களை வரதட்சணை கேட்டு கணவனின் வீட்டார் துன்பப்படுத்த படுவதை அறிந்த ஒரு பெண் திருமணம் செய்ய பயந்து தனக்கு தானே ஒரு திருமண தடையை மனதில் உண்டாக்கலாம்.
உதாரணம் 2: ஒருவர் தனது வேலைக்கு தேவையான அறிவு மற்றும் தகுதி கொண்டிருப்பதில் அவநம்பிக்கை கொண்டு, மனதளவில் வேலை கிடைப்பதில் தடையை தனக்கு தானே உண்டாக்கலாம்.
உதாரணம் 3: கணவர் பதவி உயர்வு கிடைத்து வேறு ஊருக்கு செல்ல நேரிட்டால் தான் தனியாக இருக்க நேரிடும் என்று பயப்படும் மனைவி கணவனின் பதவி உயர்வுக்கு தன்னை அறியாமலேயே தடையை ஏற்படுத்துகிறார்.