வொயிட் மேஜிக் (குருமார்கள் அனுப்பும் எதிர்மறை சக்தி தொடர்பு
ஒரு மனிதரை குறிப்பிட்ட ஆன்மிக வழிக்கு கொண்டு வர செய்யும் ஒருவகை சக்தி தொடர்பே வொயிட் மேஜிக் எனப்படும். பிறச் சக்கரங்கள் அல்லாமல் சகஸ்ரார சக்கரம் மற்றும் ஆஜ்னா சக்கரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ சக்தி தொடர்பு ஏற்பட்டு இருந்தால், அது வொயிட் மேஜிக் என அறியலாம். அந்த சக்தி தொடர்பு உள்ளே வருவதாகவோ அல்லது வெளியே செல்வதாகவோ இருக்கலாம். அதாவது, சில நேரம் சிஷ்யர்கள் குருவை நோக்கி சக்தி தொடர்பை அனுப்புவார்கள் (வெளியே செல்லும் கார்டு), குருமார்களும் சிஷ்யர்களை நோக்கி சக்தி தொடர்பை அனுப்புவார்கள் (உள்ளே வரும் கார்டு). பல குருமார்கள் சிஷ்யர்களை தங்கள் ஆன்மிக வழிக்கு கொண்டு வர சிறப்பு வழிபாடு செய்வார்கள். இரண்டு வகையான வொயிட் மேஜிக் உள்ளது.
உயிருள்ள குருவின் மூலம் ஏற்படும் சக்தி தொடர்பு
உயிரற்ற குருவின் மூலம் (குருவானவர் ஆன்ம வடிவில் இருப்பார்) ஏற்படும் சக்தி தொடர்பு
உயிருள்ள குருவின் மூலம் ஏற்படும் சக்தி தொடர்பு
இது கடவுள் பெயரைச் சொல்லி தனக்கென்று புகழை பெற விரும்பும் சிலரிடம் இருந்து வரும் சக்தி தொடர்பே ஆகும். அப்படிபட்டவர்கள், தன்னைப் பின்பற்றுபவர்களை தன் பெயரில் மந்திரங்கள் சொல்ல சொல்வார்கள். தன் புகைப்படத்தை வெளியிட்டு, விளம்பரப்படுத்தி கூட்டம் சேர்த்து சீடர்களை உருவாக்குவார்கள். அப்படிபட்ட குருமார்கள் சீடர்களின் ஆஜ்னா சக்கரத்திற்கு சக்தி தொடர்பை செலுத்தி, ஆன்மிகரீதியாக கட்டுப்படுத்தி சீடர்களை தங்கள் வழிக்கு கொண்டு வருவார்கள்.
உதாரணம் 1: சிலர் ஆன்மிக விஷயங்களை தேடி இணையத்தில் உலாவும் போது, குறிப்பிட்ட வலைப்பதிவில் உள்ள குருவின் படத்தை பார்ப்பார்கள். உடனேயே அவர்களின் சகஸ்ரார சக்கரத்தில் சக்தி தொடர்பு ஏற்பட்டு விடும். இது உடனே அவர்களை அந்த ஆன்மிக குழுவில் சேரத் தூண்டும். ஏனென்றால், பெரும்பான்மையான நேரம் அவர்கள் குழுவில் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சி செய்த வண்ணம் இருப்பார்.
உதாரணம் 2: சிலர் ஆன்மிக உரை கேட்கப் போய் அப்படியே அந்த குழுவில் இணைந்து விடுவார்கள். அவர்களால் எது சரி, எது தவறு என்று பகுத்தறிய முடியாது. அவர்கள் மத, குரு தலைவரை கடவுளை போல நினைத்து வீட்டில் அவரின் படத்தை வைத்து வணங்க ஆரம்பித்து விடுவர். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை அந்த தலைவர் அல்லது குழுவிற்கு தருமாறு கேட்பார்கள்.
உதாரணம் 3: சில குழுவில் சேர்ந்தால் அவர்கள் மற்றவர் சமைக்கும் உணவை உண்ண அனுமதிக்க மாட்டார்கள். அந்த குழுவில் அவர்களின் தாய் இல்லாவிட்டால், அவரின் உணவையும் உண்ண மாட்டார்கள். ஏனென்றால், தாய் அந்த குழுவில் இல்லாததால் தூய்மையாக இல்லை என்று கூறுவார்கள். அவர்கள் தாங்களே சமைத்துண்ண வேண்டும் அல்லது குழுவின் மற்ற உறுப்பினர்கள் சமைக்கும் உணவை மட்டுமே உண்ண வேண்டும்.
உதாரணம் 4: பல குருமார்கள் தாங்களே திரும்ப மறுபிறப்பு எடுத்து வருவதாகக் கூறி, சீடர்களை காத்திருக்கச் சொல்வார்கள். பலர், பல ஆண்டுகளாக பிறக்கப்போகும் குருவுக்காக காத்திருக்கிறார்கள். சிலர் பல தலைமுறைகளாக குருவுக்கு காத்திருக்கின்றனர்.
உயிரற்ற குருவின் மூலம் (குருவானவர் ஆன்ம வடிவில் இருப்பார்)ஏற்படும் சக்தி தொடர்பு
இறந்து விட்ட சில குருமார்கள் ஆவியாக இருந்து தங்கள் சீடர்களுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்துவது இந்த வகை. அவர்கள் சில பல தலைமுறைக்கு சீடர்களுடனேயே இருப்பார்கள். தாங்கள் உருவாக்கிய அமைப்பை பாதுகாப்பதற்காக அவர்கள் இருப்பார்கள். சில குருமார்கள் தங்களது அடுத்த பிறவிக்காக காத்திருப்பார்கள், அந்நிலையில் கூட அவர்கள் சீடர்களுடன் தொடர்பு கொண்டிருப்பார்கள்.
உதாரணம் 1: எங்கள் சிகிச்சையின் போது பல முற்பிறவி குருமார்கள் ஒருவரின் சகஸ்ரார சக்கரத்தில் இணைந்திருப்பதைக் கண்டோம். அப்படியிருந்தால், அவரது ஆன்மா முற்பிறவியில் அந்த குருவின் அமைப்பில் இருந்து சேவையாற்றி கொண்டோ அல்லது தலைமைப் பொறுப்பிலோ இருந்திருக்கலாம். உச்சந்தலையில் வலி இருக்கும்.
உதாரணம் 2: ஆவி உலகில் உள்ள ஆன்மாக்களின் குழுவில் இருந்து நிறைய சக்தி தொடர்பு வருவதை காண்கிறோம். அப்படியிருந்தால், முற்பிறவிகளில் அந்த குழுவில் நீங்கள் இருந்திருக்கலாம். அந்த குழு அல்லது அமைப்பில் நீங்கள் தலைமைப் பொறுப்பிலோ அல்லது உயர் பொறுப்பிலோ முற்பிறவிகளில் இருந்திருக்கலாம்.