சக்தி தொடர்புகள் / கார்டுகள்(Cords)

இரண்டு அல்லது அதிக நபர்களுக்கு இடையே வரும் சக்தி தொடர்புகளே கார்டுகள் ஆகும்.  இவை ஒருவர் பிறரிடம் அல்லது பிறரை பற்றி கொண்டுள்ள வலிமையான எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகளாகும். நல்ல விதமாகவோ அல்லது கெடுதலாகவோ இந்த சக்தி தொடர்புகள் இருக்கலாம், ஆனால் பொதுவாக எதிர்மறை எண்ணப் பதிவுகளே சக்தி தொடர்பாக/ கார்டாக உருவாகிறது.

இந்த சக்தி தொடர்பானது சிறிது நேரம் மட்டும் கூட இருக்கலாம், அவர்கள் உங்களை பற்றி நினைக்கும் சிறிது நேரம் மட்டுமே இருக்கும். எப்போதும் தொடர்ந்து எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருந்தால், சக்தி தொடர்பும் நிலையாக இருக்கும். விவாகரத்து பெற்றவர்களிடையே சக்தி தொடர்பானது எதிர்மறையாக தொடர்ந்து இருக்க வாய்ப்பு அதிகம்.

உதாரணமாக, அழகிய பெண்ணை கடைத் தெருவில் பார்க்கும் ஆண்கள் அனுப்பும் காம எண்ணங்களின் சக்தி சிறிது நேரம் மட்டுமே இருக்கும். ஏனென்றால் சிறிது நேரம் சென்று  வீட்டிற்கு சென்ற பின் அனைவரும் அந்த பெண்ணை மறந்தே பொய் விடுவர். மற்றொரு உதாரணம், வார இறுதியில் வெளியே போக திட்டம் போடும் மனைவி அவசர வேலையாக அலுவலகம் செல்லும் கணவனுக்கும் மற்றும் அவனது முதலாளிக்கும் கூட கார்டுகளை அனுப்பலாம். ஆனால் சிறிது நேரத்தில் போய் விடும்.

சில நேரத்தில் கார்டுகள் ஆழ்மனதில் பதிவான நினைவுகள் மூலமாக எழும் எண்ணங்களால் உருவாகும். மேலும் அது அந்த நபருக்கே தெரியாமல் இருக்கலாம், இந்த எண்ணத்தின் சக்தியானது கார்டாக வெளியேறி மற்றொரு நபருடன் எதிர்மறை சக்தி தொடர்பை உண்டாக்கும். உதாரணமாக, 65 வயது மனிதரின் இருதய சக்கரத்திற்கு வரும் சக்தி தொடர்பானது அவர் இருபது வயதில் விரும்பி, திருமணம் செய்ய முடியாமல் மறந்து போன பெண்ணிடமிருந்து வரலாம். பல வருடங்களாக அந்த பெண் ஆழ்மனதில் அந்த காயத்தை வைத்திருந்து அவருக்கு சக்தி தொடர்பை (கார்டை) அனுப்பி கொண்டே இருப்பார்.  அந்த மனிதரின் இருதயத்தை அது தொடர்ந்து பாதிக்கும்.

சக்தி தொடர்பானது அறிந்தோ அல்லது அறியாமலோ, தெரிந்த நபரிடமிருந்தோ அல்லது அறிமுகமில்லாத நபரிடமிருந்தோ, ஏன் சில நேரங்களில் இறந்து போன மனிதரின் ஆன்மாவிடம் இருந்தோ கூட சக்தி தொடர்பு உருவாகும்.  உதாரணமாக, இறந்து போன உங்கள் நண்பருடன் தீராத பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், இறந்த பின்பும் அவரது ஆன்மாவிடமிருந்து சக்தி தொடர்பு வரலாம்.

சக்தி தொடர்பின் (கார்டுகளின்) வகைகள்:

பொறாமை, ஆற்றாமை, கோபம், மனக்காயம், ஏமாற்றம், பழிவாங்கும் எண்ணம், காமம் போன்றவை, செய்வினை மற்றும் குருவின் கார்டுகள்.

சக்தி தொடர்பு கீழ்காணும் நபர்களிடம் இருந்து வரலாம்:
குடும்ப உறுப்பினர்கள், சொந்தங்கள்
கணவனின் குடும்பத்தினர்
வாழ்க்கை துணைவர்
மகன் மற்றும் மகள்கள்
அலுவலக சக ஊழியர்கள்
வகுப்பு தோழர்கள்/ சக மாணவர்கள்
அண்டைவீட்டார்
வேலையாட்கள்
நோயாளிகள் சிகிச்சை அளிப்பவருக்கு
வேலை/ தொழில் போட்டியாளர்கள்
முன்னாள் கணவன்/ காதலன், முன்னாள் மனைவி/ காதலி (மிகவும் எதிர்மறையாக இருக்கும் பல நேரங்களில்)
நாம் திருமணம் செய்ய மறுத்த அல்லது நிராகரித்த ஆண்/ பெண் (இந்தியாவில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இவை உருவாகும்)
ஆன்மிக குருக்கள்/ மையங்கள்/ சிகிச்சை அளிப்பவர்கள்
மந்திரவாதிகள்
மத சார்பான இடங்கள், போன்றவை.

கீழ் காணும் இடத்தில் சக்தி தொடர்பு பாதிக்கும்

ஒன்று அல்லது அதிகமான அல்லது அனைத்து பெரிய சக்கரங்கள்
ஒன்று அல்லது அதிகமான உடல் உறுப்புகள்
பரு உடலின் ஏதாவது ஒரு பாகம்
சக்தி (எனர்ஜி)/ எண்ண(எமோஷனல்) / மன (மெண்டல்) உடல்

சக்தி தொடர்புகள் பெரும்பாலும் சோலார் சக்கரத்திற்கு வரும்.  ஏனென்றால் அது பிராணா உடலில் நுழையும் மண்ணீரல் சக்கரத்திற்கு அருகில் இருக்கிறது. ஆனால், பிற சக்கரங்களிலும் வரும்.

நமது உடலின் சக்தி குறைந்த பலவீனமான இடங்களுக்கே சக்தி தொடர்பானது வரும்.  உதாரணமாக, உங்கள் கல்லீரல் ஏற்கனவே பாதிக்க பட்டிருந்தால், சக்தி தொடர்பு எளிதாக கல்லீரலை பாதிக்கும்.

சக்தி தொடர்பினால் வரும் பாதிப்புகள்

உடல் பாதிப்பு/ வலி
உணர்வுரீதியான தொந்தரவுகள்
மன பாதிப்புகள்
பலவிதமான தடைகள்

சக்தி தொடர்பு உங்களிடமிருந்து வெளியில் சென்றாலோ, அல்லது வெளியில் இருந்து உங்களுக்கு வந்தாலோ, நீங்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவீர்கள்.

நீங்கள் கார்டை வெளியே அனுப்பும் போது, உங்கள் பிராண சக்தியானது சக்தி தொடர்பாக வெளியேறுகிறது. அதனால், பிராண சக்தியானது குறைந்து, சக்கரங்களையும் அதற்கு தொடர்புடைய உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது.

சக்தி தொடர்பானது உங்களது எதிர்மறை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருப்பதால், உயிர் சக்தியானது தேவையில்லாமல் மனதில் எதிர்மறை எண்ணப் பதிவுகளை உண்டாக்க உபயோகப்படுத்தப்பட்டு உங்களை கிளர்ச்சியுற செய்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. மற்றும் உடல் வலியையும் உண்டாக்கலாம்.

சக்தி தொடர்பானது சக்கரத்திற்கு வரும்போது, அவ்விடத்தின் சக்தியை பாதித்து, நாடிகளில் பிராண ஓட்டத்தை தடை செய்து சிறிது சிறிதாக முழு உடலையும் பாதிக்கிறது.  கோபமான சக்தி தொடர்பு உங்களை பாதிக்கும் போது, அது உங்களிடம் கோபத்தை ஏற்படுத்துகிறது, காம உணர்வு கார்டு வரும்போது உங்களுக்கும் காம எண்ணங்கள் உருவாகிறது. பிற உணர்ச்சிகளான சோகம், பதற்றம், கவலை போன்றவையும் அவ்வாறே.  நீங்கள் அதே ரீதியான உணர்வுகளை உங்களை அறியாமல் அனுபவிப்பீர்கள். அப்படிப்பட்ட எண்ணங்களும், உணர்வுகளும் ஏன் மனதை ஆக்கிரமிப்பு செய்கின்றன என்று புரியாமல் குழம்பித் தவிப்பார்கள். சக்தி தொடர்பானது நீண்ட காலமாக ஒரே சக்கரத்திலோ / உறுப்பிலோ இருந்தால் தீவிரமான உடல் பாதிப்புகளை உண்டாக்கும்.

உதாரணம் 1: இருதய சக்கரத்தில் உள்ள நீண்ட கால கார்டானது அடைப்பை ஏற்படுத்தி இருதயம் சரி வர இயங்காமல் தடுக்கும்.

உதாரணம் 2: பாலுறுப்பு (செக்ஸ்) சக்கரம் / கருப்பையில் ஏற்படும் சக்தி தொடர்பானது கருப்பை கான்சரை உண்டாக்கலாம் அல்லது குழந்தை பேறு பெறுவதில் தடையை ஏற்படுத்தலாம்.

உதாரணம் 3: கணையத்திற்கு வரும் சக்தி தொடர்பானது ஒருவரை சர்க்கரை நோயாளி ஆக்கி  அதிலிருந்து மீள முடியாமல் செய்யும்.

சக்தி தொடர்பை பூமி, சூரியன் போன்றவற்றில் வெட்டி வீச முடியாது. ஏனென்றால் சக்தி தொடர்பானது உங்களை நோக்கி பிறரால் அனுப்பப்பட்ட எதிர்மறை எண்ணங்களாகும். பிறரது  உங்களை பற்றிய எண்ணங்கள் நல்லவிதமாக மாறும் வரை அவர்கள் சக்தி தொடர்பை தொடர்ந்து அனுப்பி கொண்டே இருப்பார்கள்.

நீங்கள் நேர்மறையான நல்ல எண்ணத்துடன் இருந்து, மற்றவரை மன்னிக்கும் மனோபாவத்துடன் இருந்து, அவர்களை வாழ்த்தினால் பிறரிடமிருந்து வரும் சக்தி தொடர்பை நிறுத்தலாம். அது உங்களை பாதிக்காது. ஆகவே நீங்கள் முதலில் மாற வேண்டும்.

மற்றவரை மன்னித்தும், மற்றவரிடம் மன்னிப்பு கேட்டும் நீங்கள் உங்களை காத்து கொள்ளலாம். முக்கியமாக, கடவுளுடனான உங்கள் தொடர்பை  வலுவுள்ளதாக வைத்து கொண்டால், கடவுளின் பாதுகாப்பு தானாகவே உங்களுக்கு கிடைத்து விடும்.