எமது சிகிச்சையின் தனித்தன்மை

1. நாங்கள் கட்டணம் பெறுவதில்லை. எங்களது அனைத்து வகுப்புகள் மற்றும் சிகிச்சைகளும் முற்றிலும் இலவசம். துன்பப்படும் அனைவருக்கும், பணம் செலுத்தி எந்த வித மருத்துவ சிகிச்சையும் பெற இயலாத எளிய மக்களுக்கும் உதவி செய்ய விரும்புகிறோம்.

2. எங்களுக்கு குரு கிடையாது; இறைவனாலும், இறை சக்தியாலும் மட்டுமே வழி நடத்தப்படுகிறோம்.
எந்த விதமான தீட்சை முறையும் இல்லை.

3. படைப்பின் ஆற்றலான ‘தெய்வீக நெருப்புடன்’ நாங்கள் இணைகிறோம். நாங்கள் ‘வெள்ளை ஒளி’ எதையும் கற்பனை செய்வது இல்லை.

4. தியான முறைகள் எதுவும் இல்லை.

5. சிகிச்சை அளிப்பதுடன் முக்கியமாக ஒருவர் தன்னையும், தனக்கு நெருக்கமானவர்களையும் பராமரித்து காக்க கற்றுத் தருகிறோம்.

6. அனைவருக்கும் பொதுவான பிரபஞ்சத்தின் கர்ம விதியை பின்பற்றுகிறோம். ஒருவர் மன்னிப்பு கேட்ட பிறகே சிகிச்சை அளிக்கிறோம். ஒருவரது கர்மாவில் குறுக்கிடுவதில்லை ஆனால் அவரது முற்பிறவிகள் மற்றும் இப்பிறவியின் கர்ம வினைப் பயன்களை சமன் செய்வது எப்படி என்று கற்றுத் தருகிறோம்.

7. எங்களது சிகிச்சை ஆன்மாவிற்கானது; மனதிற்கு அல்ல.

8. நாங்கள் எந்த புத்தகத்தையும் பின்பற்றவில்லை; எங்களுக்கு வெளிபடுத்தப்பட்ட உண்மைகளையும், கோலினால் கண்டறிந்தவற்றையும், நாங்கள் சிகிச்சை அளித்த அனுபவத்தையும் மற்றும் எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களின் அனுபவங்களையும் மட்டுமே சொல்லித் தருகிறோம்.

9. பிராணா வயலட் ஹீலர், பிறருக்கு சிகிச்சை அளிக்க ‘பிராணா சிகிச்சை கோலை’ உபயோகிப்பதாலும், மன்னிப்பு அறிக்கையை முறையாக பயன்படுத்துவதாலும் சிகிச்சை பெறுபவரின் நோய் சக்தியால் பாதிப்படைவதில்லை. ஹீலர் தனது சொந்த சக்தியை பயன் படுத்துவதில்லை; கோலில் இருந்து வரும் சக்தியினால் மட்டுமே சிகிச்சை செய்யப்படுகிறது.

10. இது தொடாமல் செய்யப்படும் சிகிச்சை முறை; நாங்கள் எந்த வித சூழ்நிலையிலும் நோயுற்றவரை தொடுவதில்லை. அனைத்து சிகிச்சையும் ஆராவில் (ஒளி உடலில்) செய்யப்படுகிறது.
இது மருந்தில்லா சிகிச்சை முறை.

11. நாங்கள் எந்தவித மருந்தும் பரிந்துரைப்பதில்லை ஆனால் உணவு முறை குறித்த ஆலோசனைகள் வழங்கலாம் – எதை உண்ணலாம் எதை உண்ணக்கூடாது என்று கோலினால் உணர்ந்து அறிந்து சொல்லலாம்.

12. கோலைக் கொண்டு கர்ப்பிணி பெண்கள், பச்சிளங்குழந்தைகள் மற்றும் கருவில் உள்ள குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் பத்திரமாக சிகிச்சை செய்யலாம்.

13. நாங்கள் குழு அமைப்பதிலோ அல்லது உறுப்பினர் சேர்க்கையிலோ ஈடுபடுவதில்லை.

14. எமது தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படும் போது பயிற்சி வகுப்பு நடத்தவும், கற்று கொடுக்கவும் மற்றும் சிகிச்சை அளிக்கவும் உதவி செய்கிறார்கள்.

15. ஆன்மிக சக்தியை அதிகரிக்க செய்வதும் மற்றும் இறைவனுடன் நமது தொடர்பை மேம்படுத்துவதும் எங்களது வகுப்பின் ஒரு பகுதியாகும்.

16. நாங்கள் இறைவனின் கருவி மட்டுமே; இறைவன் தனது வேலைக்காக எங்களை உபயோகித்துக் கொள்கிறார் என்பது எங்கள் நம்பிக்கை.